அல்வா கொடுத்தது போதும் அதிகாரிகளே....! டி.சி நிலங்களை மீட்டுதாருங்கள்! த.ம.மு.க. ஆர்பாட்டம் அறிவிப்பு!
ஆர்.ரமேஷ்,
பட்டியலின மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலத்தை அபகரித்துக் கொண்டிருப்பவர்கள் மீது உடனடியாக எஸ்.சி/எஸ்/டி சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்பாட்டம் நடத்தவிருக்கிறார்களாம்.
அதற்கான அறிவிப்பை வேலூர் மாவட்ட செயலாளர் பொன்.குணசீலன் வெளியிட்டிருக்கிறார்.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, கடந்த 11 வருடங்களாக பஞ்சமி நிலத்தை மீட்கும் போராட்டம் நடத்து வருகின்றோம் இதற்கான நான் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தோம் அந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த 26-09-2023 தாசில்தார் நெடுமாறன் ஆர்.ஐ. கீதா ஆகியோர் நேரில் வந்து பக்காலபல்லி மிட்டப்பள்ளி பாலூர் அரவட்லா பல்லலகுப்பம் தொட்டித்துரை TT மோட்டூர் பத்தலபல்லி மாச்சம்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள நிலம் எங்கள் மனுக்களை சரி பார்த்தனர்.
இது பஞ்சமி நிலம் விதி மீறப்பட்டுள்ளது இதை நாங்கள் 10 நாட்களுக்குள் அளந்து கொடுக்க நடவடிக்கை எடுக்கிறோம். இது பஞ்சமி நிலம் தான் என பொதுமக்கள் முன்னிலையில் பரிசீலனை செய்தனர். ஆனால் அவர்கள் கூறியபடி எதுவும் செய்யவில்லை
ஆகையால் மீண்டும் 07-11-2023 அன்று பஞ்சமி நிலங்கள் உள்ள நிலத்தில் பெயர் பலவைகள் வைத்தோம் அப்போது கோட்டாட்சியர் வெங்கடராமன் மற்றும் தாசில்தார் சுரேஷ்குமார் எங்களை அழைத்து அமைதி கூட்டம் நடத்தினார்.
தீபாவளி பண்டிகைக்கு பின்னர் 10 நாட்களுக்குள் பஞ்சமி நிலங்களை அளந்து மீட்டு தருகிறோம். என உறுதியளித்தனர். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையுமில்லை.
ஆகையால் மீண்டும் கடந்த 12-03-2024 அன்று ஏர் உழும் போராட்டம் நடைபெற்று நிலத்தை ஏர் உழுது விதை விதைக்கப்பட்டது.

அங்கு பாய்ந்து வந்த போலீசார், பேர்ணாம்பட்டு காவல் காவல்துறையினர் எங்களை சுமார் 200 பேரை கைது செய்தனர். அதுசமயம் பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் திரு. விநாயக மூர்த்தி அவர்கள் நாங்கள் உழுத நிலத்தில் நேரில் வந்து விசாரணை செய்தனர். தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் முடிந்தவுடன் எங்களுக்கு விதிமீறப்பட்டுள்ள நிலத்தை கையகப்படுத்தி எங்களிடம் ஒப்படைப்பதாக கூறினார்.
இப்படி அதிகாரிகள் கூறியபடி எதுவும் செய்யவில்லை, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அல்வா கொடுத்துவிட்டனர்.
ஆகவே வருகின்ற மார்ச் மாதம் 01தேதி அன்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக
பட்டியலின மக்களின் சொந்தமான பஞ்சமி நிலத்தை மீட்க கூறியும் பஞ்சமி நிலங்களை அபகரித்துக் கொண்டிருக்கும் அவர்களை உடனடியாக எஸ்.சி/எஸ்/டி சட்டப்படி கைது செய்யும் கோரியும்
பேர்ணாம்பட்டு பேருந்து நிலையத்தில் காலை 10 மணிக்கு ஆர்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தவர், இம்முறை சமாதான பேச்சுக்கே இடமில்லை அரசாங்கம் சம்பளம் பெறும் அதிகாரிகள் அவர்கள் கடமையை செய்ய வலியுறுத்துவோம் என்று சொன்னார்.

admin
