ரவுடியின் உயிரை காப்பாற்றி காயமடைந்த காவல் துறையினர்!

ரவுடியின் உயிரை காப்பாற்றி காயமடைந்த காவல் துறையினர்!

ம.பா.கெஜராஜ்,

  போலீஸ் பாதுகாப்பில் இருந்த பிரபல ரவுடியின் உயிரை காப்பாற்றிய காவல் துறையினர் செயல் மெய் சிலிர்க்கவைத்திருக்கிறது.

மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளை காளியை அழைத்துச் சென்ற போலீசார் மீது பெரம்பலூர் திருமாந்துறை அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாகவும், நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் ரவுடிக்கு பாதுகாப்பாக வந்த போலீசார் 3 பேர் காயமடைந்தார். ரவுடி வெள்ளைக்காளியை காப்பாற்றுவதற்காக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், சினிமா பாணியில் தோட்டாக்கள் படாமல் 2 கார்களில் கொலைக் கும்பல் தப்பியோடியுள்ளது.

  திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே, கைதியை ஏற்றிச் சென்ற காவல்  வாகனம் ஓட்டலில் சாப்பிடுவதற்காக நிற்கவைத்த போது  மர்ம கும்பல், நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

  இந்த சம்பவத்தில், ரவுடி வெள்ளை காளிக்கு பாதுகாப்பாக வந்த மூன்று காவல்துறை வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவம னையில் அனுமதி  க்கப்பட்டுள்ளனர்.

  கைதியை வெட்டி கொலை செய்ய முயன்ற கும்பலை தடுக்க போலீசார் முயன்றுள்ளனர்.

   நிலைமையை கட்டுப்படுத்து வதற்காக, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதன் பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் காரில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. கைதியான வெள்ளை காளி மீது, ஒன்பது கொலை வழக்குகள், எட்டு கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 30-க் கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

   குறிப்பாக, மதுரை 'கிளாமார் காளி' கொலை வழக்கில் அவர் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுகிறார். கடந்த மார்ச் 22, 2025 அன்று, மதுரையின் தனக்கன் குளம் பகுதியில் திமுக தலைவர் வி.கே. குருசாமியின் உறவினரான 'கிளாமர் காளி' என்றும் அழைக்கப்படும் காளிஸ்வரன், நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை 22 ஆண்டுகால கும்பல் சண்டையின் விளைவாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

   இந்த வழக்கில், வில்லிய காளி மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் தொடர் கொலையாளிகள் என்று குறிப்பிடப்பட்டனர், ஆனால் தேடப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் பின்னர் ஒரு என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், காளா மார் காளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வெள்ளை காளியை, வேறொரு வழக்கிற்காக சென்னை நீதிமன் றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றபோதுதான், எதிர்தரப்பினர் இந்த தாக்குதலை நடத்தியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

   தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க மாவட்டம் முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் ரவுடிக்கு பாதுகாப்பாக வந்த போலீசார் 3 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரவுடி வெள்ளைக்காளியை காப்பாற்றுவதற்காக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், சினிமா பாணியில் தோட்டாக்கள் படாமல் இரண்டு கார்களில் கொலைக் கும்பல் தப் பியோடியுள்ளது.

  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

   தங்கள் உயிரை துச்சமென நினைத்து கடமையாற்றிய காவல் துறையினரை உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.