"திமுக கவுன்சிலரால்" வேலூர் மாவட்டத்தில் கள்ள லாட்டரி பிசினஸ் கனஜோர்! வடக்கு மண்டல ஐஜிக்கு புகார்!

"திமுக கவுன்சிலரால்" வேலூர் மாவட்டத்தில் கள்ள லாட்டரி பிசினஸ் கனஜோர்! வடக்கு மண்டல ஐஜிக்கு புகார்!

த.நெல்சன்,

 தமிழகத்தில் வெளிமாநில லாட்டரிகள் மற்றும் 2, 3 நம்பர் காட்டன் சீட் விற்பனை செய்வது 2003ம் ஆண்டு முதல் தமிழக அரசால் தடை செய்யப்பட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையினால் ஏழை மக்கள் பிழைத்தனர்.

 ஆனால் தற்போது அவை வேலூர் மாவட்டத்தில் கனஜோராக நடத்திக் கொண்டு டுபாக்கூர் ரவுடிகளும், அரசியல்வாதிகள் சிலரும் சூப்பராக கல்லாகட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

 இந்த தொழிலுக்கு குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சி கவுன்சிலரே முக்கிய காரணம். அவரிடமிருந்துதான் வட தமிழகத்தில் இந்த கள்ள ப்விசினஸ் கொடிகட்டி பறக்கிறது.

 அப்படிப்பட்ட நபரை பல முறை பிடித்து வழக்கு போட்டும் கூட அவர் திருந்தியபாடில்லை.

 குறிப்பாக, குடியாத்தம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட சந்தப்பேட்டை தண்ணி டேங்க், சித்தூர் கேட், சிவமதி கார்டன், நடுப்பேட்டை, பிச்சனூர்பேட்டை, புவனேஸ்வரி பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளிலும் அதேபோல் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட செருவங்கி, காக்காதோப்பு, வளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆன்லைன் லாட்டரி, காட்டன் எழுதுவது அரங்கேறி வருகிறது.இதனால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது.

குடியாத்தம் டவுன் மற்றும் கிராம பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட இடங் களில் டீக்கடை, பங்க் கடை மற்றும் திறந்தவெளியில் சாலை ஓரங்களிலும் சூதாட்டம் நடக்கிறது.

 'கேஎல்' என்கிற பெயர் கொண்ட காட்டன் பகல் 3 மணிக்கும், 'டியர்' பெயர் கொண்ட காட்டன் நாள் ஒன்றுக்கு 4 முறையும் முடிவுகள் வெளியிடப்படுகிறது.

  இதற்காகவே அந்த திமுக கவுன்சிலர் பைனான்ஸ் என்கின்ற பெயரில் ஒரு அலுவலகத்தை வைத்துக்கொண்டு இந்த கள்ள லாட்டரி தொழிலை செய்து வருகிறார்

 இந்த காட்டன் சூதாட்டத்தால் ஆட்டோ டிரைவர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள், சிறு, குறு வியாபாரிகள் சிக்கி தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். மேலும் காட்டன் வைத்து விளையாட பணம் இல்லாதவர்கள் வீட்டில் உள்ள நகை பொருட்களை அடமானம் வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் விளையாடுவதால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டது.

  போலீசில் உயர் அதிகாரிகளுக்கு புகார் சொல்லும்போது கண் துடைப்புக்கு சிலரை பிடித்து கைது செய்து வழக்குப்பதிவு செய்து விட்டு பின்னர் ஜல்சாவாக தொழில் செய்ய அனுமதிக்கின்றனர்.

   மேலும் வேலூர் வடக்கு மற்றும் தெற்கு காவல் நிலைய எல்லைப்பகுதில் இந்த காட்டன் மற்றும் கேரளா லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது.

   குறிப்பாக டோல்கேட்பகுதியை தலைமையிடமாக கொண்டு காட்டன் சூதாட்டமும், அதே போல் காந்தி ரோட்டில் கேரளாலாட்டரியும் விற்பனை செய்யப்படுகிறது.  அதே போல் மார்க்கெட் பகுதியிலும் இந்த சுரண்டல் பிசினஸ் நடந்துவருகிறது.

 இதற்கெல்லாம் ஒரு சில போலீசார் அனுமதி கொடுத்திருந்தாலும் கூட குட்டி குட்டி போலீ ரவுடிகள் மாமுல் பெற்றுக் கொண்டு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.

 இதெல்லாம் சம்மந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு தெரிந்தே நடத்தப்படுகிறது. ஆகவே  வடக்கு மண்டல ஐஜி அவர்களின் பார்வைக்கு இதுகுறித்து புகார் செல்லவுள்ளதாம்.

 இவற்றுக்கெல்லாம் ஒட்டு மொத்தமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென முடிவெடுத்தால், குறிப்பிட்ட அந்த குடியாத்தம் கவுன்சிலர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தாலே போதும் என்பது சமூல ஆர்வலர்களின் கருத்து.

  ஏழை மக்களை விட்டு விடுப்பா கோபாலா கோபாலா!