மாணாக்களை கொட்டிய தேனீக்கள்!

 மாணாக்களை கொட்டிய தேனீக்கள்!

ஜி.குலசேகரன்,

பொன்னேரி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி சாப்பிட வந்த பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் காலை உணவு திட்ட பணியாளர் உட்பட 12 பேரை தேனீக்கள் கொட்டியதில் மருத்துவமனையில் அனுமதி

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 150 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவி மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

   இந்த நிலையில் பள்ளி மாணவ,மாணவிகள் காலை உணவு திட்டத்தில் காலை சிற்றுண்டி சாப்பிட வந்துள்ளனர்.

  அப்போது உணவு சாப்பிட்டு முடித்துவிட்டு பள்ளி வளாகத்தில் மாணவ மாணவிகள் விளையாடி கொண்டிருந்தபோது அங்கு மரத்தில் தேன் கூடு கட்டிருந்த நிலையில் அதன் மீது தவறுதலாக யாரோ கல் எரிந்துள்ளனர்.

  அப்போது தேன்கூடு கலைந்து தேனீக்கள் அங்கு விளையாடி கொண்டிருந்த பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் காலை உணவு திட்டத்தில் வேலை செய்யும்  உட்பட 12 பேரை தேனீக்கள் கொட்டியுள்ளது.

   அதன் பின்பு அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவிக்கப்பட்டு இரண்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக 12 பேரை மீட்டு பொதுமக்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில் 12 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

 காலை உணவு திட்டத்தில் சிற்றுண்டி சாப்பிட வந்த பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் காலை உணவு திட்ட பணியாளர் உட்பட 12 பேரை தேனீக்கள் கொட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.