பழச்சாறு தொழிற்சாலையின் கழிவுகளால் நிறம் மாறிய தண்ணீர்!

பழச்சாறு தொழிற்சாலையின் கழிவுகளால் நிறம் மாறிய தண்ணீர்!

ஜி.கே.சேகரன்,

 கந்திலி அருகே செயல்பட்டு வரும் தொழிற்சாலையின் கழிவுகளால் நிறம் மாறும் தண்ணீர்!. தக்க நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

   திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த கரியம்பட்டி பகுதியில் ஏபிசி என்கிற பெயரில்¢ பழச்சாறு தொழிற்சாலை  செயல்பட்டு வருகிறது. அந்த தொழிற்சாலையில் சீசனுக்கு தகுந்தாற்போல் ஒவ்வொரு பழங்களை அரைத்து சாறாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

  அப்படியிருக்க சாறு கெட்டுப்போகாமல் இருக்க அதில் ரசாயனம் கலந்த தண்ணீரில் அதனை ஊறல் போடுவதாக கூறப்படுகிறது.

  அப்படி பயன்படுத்தும் தண்ணீரை கம்பெனியில் உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் அவர்களுக்கு சொந்தமான பண்ணையில் ராட்சத தொட்டியில் விடுவதாக கூறப்படுகிறது.

  இதனால் கரியம்பட்டி, சந்திரபுரம், சுடுகாட்டூர் உள்ளிட்ட பகுதியில் நிலத்தடி நீர் நிறம் மாறுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  அந்த பகுதியில் விவசாயம் கெட்டு போவதாகவும், எதிர்காலத்தில் உடல் நிலை சரியில்லாமல் போகவும் வாய்ப்பு உள்ளதால் தனியார் கம்பெனி சுய லாபத்திற்காக செய்யும் விவசாயத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் எதிரான செயல்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.