சசிகலா கட்சி வேட்பாளர் மீது பண மோசடி புகார்!
ஜி.குலசேகரன்,
புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் காட்பாடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரன் என்பவர் மீது பண மோசடி புகார்
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த முத்தரிசிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் அச்சுதன்( ஆட்டோ ஓட்டுனர்) அவருடைய மனைவி கவிதா இவர்களுடைய மகன் அஜித் குமார் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் இவர்களுக்கு சந்திரன் என்பவர் அறிமுகம் ஆகி உள்ளார் (சந்திரன் ரயில்வே போலீஸ் ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்)
இவர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அஜித் குமாருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி கடந்த 2020 ஆம் ஆண்டு சந்திரன் 8 லட்ச ரூபாய் பணம் வாங்கிக் கொண்டுள்ளார்.
இதுவரை அரசு வேலை வாங்கி தராமலும் பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் மேல்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்த வந்தனர்.
இது சம்பந்தமாக புகாரை வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகாரி அளிக்க வேண்டும் என மேல்பாடி காவல் நிலையத்தில் கூறியதால் பாதிக்கப்பட்ட தம்பதிகள் வேலூர்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து புகாரை அளித்தனர்.

admin
