கிராம சபையில் அமரமறுத்த திட்ட அலுவலர்! காலில் காயம் என்பதால் தவிர்த்தாராம்!

ஜி.குலசேகரன்,

 குடியரசு தினத்தினை முன்னிட்டு வெங்கடாபுரத்தில் கிராமசபா கூட்டம் நடைபெற்றது - கிராம மக்களை மதிக்காமல் நின்றபடியே பார்த்துவிட்டு சென்ற திட்ட இயக்குநர் அதிகாரி

 வேலூர்மாவட்டம், வேலூர் அருகேயுள்ள வெங்கடாபுரத்தில் குடியரசு தினத்தில் கிராமசபா கூட்டம் ஊராட்சிமன்ற தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.

 அப்பகுதி கிராம மக்கள் திரளானோர் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளை மனுவாகவும் நேரடியாகவும் கூறினார்கள்.

 இதில் மேம்பாலமோ அல்லது சிறிய பிரிட்ஜ் அமைக்க வேண்டும், சாலைகளை தார்சாலைகளாக மாற்ற வேண்டும் தெருக்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு தேவை எனவும் கிராம மக்கள் எடுத்துரைத்தனர்.

 அப்போது வேலூர் மாவட்ட திட்ட இயக்குநர் காஞ்சனா என்பவர் கிராமசபை கூட்டம் நடத்த சிறப்பு அதிகாரியாக வந்தார்.

 அவர் மக்களுடன் தரையில் அமர முடியாது என கூறியதுடன்,உறுதிமொழி எடுத்துக் கொண்டு  ஐந்தே நிமிடங்களில் அங்கிருந்து சென்றுவிட்டார்.

 கிராம மக்கள் பல மணிநேரம் தரையில் அமர்ந்து தங்களுக்கு செய்ய வேண்டிய திட்டபணிகள் குறித்து எடுத்து கூறினார்கள்.

 மாவட்ட அளவிலான அதிகாரி கிராமசபையில் அமராமல் சென்றது கிராம மக்களை அவமதிக்கும் செயலாகவே அமைந்துள்ளது என்று பலரும் வருத்தப்பட்டனர்.

 கிராம மக்களின் கஷ்டங்களை நேரடியாக தெரிந்துகொள்ள தான் கிராமசபா கூட்டங்கள் நடத்தப்படுகிறது. 

அதற்காக அதிகாரிகளை நியமித்து அவர்களின் குறைகளை தீர்த்து வைக்கும் நோக்கில் அவற்றை கேட்டறிய மாவட்ட நிர்வாகம் உத்தரவிடும்.

அப்படித்தான் மேற்படி திட்ட அலுவலர் காஞ்சனா அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

ஆனால் அவர் எதை பற்றியும் கேட்காமல் கூட்டத்திலிருந்து புறப்பட்டு சென்றது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கிராமசபை மற்றும் கிராம மக்களையும் அவமரியாதை செய்யும் விதமாக செயல்பட்ட திட்ட அலுவலர் காஞ்சானா மீது தலைமை செயலாளரிடமும், மத்திய உள்துறை அமைச்சகத்திலும் புகார் அளிக்கப்போவதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்திருந்த நிலையில் அதை தற்போது கைவிட்டு இருக்கிறார்கள்.

காரணம் அந்த மேடத்திற்கு காலில் சற்று பிராப்ளம் ஆகையால் தான் உட்கார முடியவில்லை என்று தெரிவித்தனர்.

 ஓகே ஓகே.