அவிழ்த்து போட்டுவிட்டு பெண்ணுக்கு வீடியோ கால் செய்த எம்.பி.!ஆய்வுக்கு உத்தரவிட்ட முதல்வர்!

வி.வித்யாசாகர்,
பரபரப்புக்கு பெயர் பெற்ற எம்.பி. ஒருவர் இளம் பெண்ணுக்கு அவிழ்த்து போட்ட நிலையில் 'வீடியோ கால்' செய்தார். இந்த ஆபாச வீடியோ சமாச்சாரம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.
இது பற்றி வருமாறு,
ஆந்திரா மாநிலம், இந்துபுரம் தொகுதியில், ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியின் எம்.பி.,யாக இருப்பவர் கோரன்ட்லா மாதவ், இவர், ஆரம்பத்தில் காவல் துறையில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்தார்.
அப்போது தெலுங்கு தேச கட்சியில் திவாகர் ரெட்டி என்பவர் எம்.பி.யாக இருந்தார்.
அந்த சமயத்தில் எம்.பி.திவாகர் ரெட்டிக்கு சல்யூட் அடிக்கவில்லை என்று சொல்லி சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்த மாதவனை எம்பி மிரட்டினார்.
இதனால் வெகுண்டெழுந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கோரன்ட்லா மாதவ் தன் மீசையை முறுக்கிக் காட்டி எம்.பி.திவாகர் ரெட்டிக்கு சவால்விட்டார்.
இந்த சமாச்சாரம் ஆந்திர அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதையறிந்த அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கோரன்ட்லா மாதவை அழைத்து சால்வை அணிவித்து பாராட்டினார்.
பின்னர் அவர் அதோடு நிற்கவில்லை, மாதவன் வகித்த காவல் துறை பதவியை ராஜினாமா செய்யவைத்து அதற்கு பதிலாக எம்.பி.யாக போட்டியிட சீட்டு கொடுக்க வைத்து வெற்றிபெறவைத்தார்.
அப்படி சரித்திரம் படைத்த அந்த எம்.பி. தற்போது ஒரு இளம்பெண்ணுக்கு மொபைல் போனில் வீடியோ கால் செய்து, ஆபாசமாக பேசியுள்ளார். இப்படி மாதவ் பேசிய வீடியோ கால் பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த செக்ஸ் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த காட்சிகள் வேகமாக பரவி வரும் நிலையில் தெலுங்கு தேசம் உட்பட எதிர்க்கட்சியினர், கோரன்ட்லா மாதவ் தன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என போர்கொடி தூக்கியிருக்கிறார்கள்.
இந்த விஷயமும் முதலமைச்சர் ஜெகன் மோகன் பார்வைக்கு சென்றதும், அவர் விசாரித்துள்ளார்.
அப்போது, 'அந்த வீடியோ 'மார்பிங்' செய்யப்பட்டது' என கோரன்ட்லா விளக்கம் அளித்துள்ளார். ஆனால், அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்ய ஜெகன் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
நம்மவூர் ராகவன் கதை போலிருக்கே?