கள்ளக்காதல்...கணவரின் நண்பருடன் ஓட்டம் பிடித்த பெண்!
ஜி.குலசேகரன்,
ஜேசிபி ஓட்டுனரின் மனைவிக்கும், நண்பருக்கும் இடையில் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு...கணவனை பிரிந்த மனைவி தன் பிள்ளைகளை மீட்டு தருமாறு கணவன் காவல் நிலையத்தில் புகார்.
தர்மபுரி மாவட்டம் கொம்புகுட்டை பகுதியை சேர்ந்த அருள்குமார் (37) மற்றும் அதே பகுதியை சேர்ந்த அஸ்வினி ( 29) ஆகிய இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணமாகி ஒரு ஆண் மற்றும் பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் ஜேசிபி ஓட்டுனராக அருள்குமார் வேலை பார்ந்து வந்துள்ளார்.
மேலும் அருள்குமாரின் நண்பரான ஏலகிரி மலை பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவரை தர்மபுரியில் உள்ள தனது வீட்டிற்கு அருள்குமார் அழைத்து சென்றுள்ளார். அப்போது அருள்குமாரின் மனைவியான அஸ்வினி என்பவருக்கும் அருள்குமாரின் நண்பரான பிரசாந்த் என்பவருக்கும் இடையே கள்ளதொடர்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பலமுறை கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அருண்குமார் தன் மனைவி அஸ்வினியை அவர் வேலைசெய்யும் ஏலகிரிமலை பகுதிக்கே அழைத்து வந்து தன்னுடன் வைத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த இரண்டாம் தேதி கள்ளகாதலன் பிரசாந்த் மற்றும் அஸ்வினி இருவரும் வீட்டைவிட்டு சென்றுள்ளனர்.
அதன் பின்னர் இது தொடர்பாக அருள்குமார் தன் மனைவி 20 சவரன் தங்கநகை மற்றும் 1,47,000 ரூபாய் ரொக்கப் பணத்தை எடுத்து கொண்டு சென்றதாகவும் மேலும் தன் மனைவியை மீட்டு தருமாறும் ஏலகிரிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் தேடி வந்த நிலையில், கள்ளக்காதல் ஜோடி திருப்பூரில் தங்கி இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்று அருள்குமார் மற்றும் போலீசார் அவர்களை தேடி திருப்பூருக்கு சென்றனர்.
இந்நிலையில் போலீஸார் வருவதை அறிந்து அங்கிருந்து கோயம்புத்தூருக்கு தப்பி சென்றுள்ளனர்.
அதன்பின் அவர்களின் செல்போன் லொகேஷனை வைத்து கோயம்புத்தூருக்கு சென்றுள்ளனர். அதன் பின் போலீசார் அவர்கள் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டதை அறிந்து கொண்ட அஸ்வினி கடந்த 10ஆம் தேதி ஜோலார்பேட்டை காவல்நிலையில் தானாக வந்து சரணடைந்துள்ளார்.
அதன் பின்னர் அருள்குமார் மற்றும் அஸ்வினி ஆகிய இருவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் அஸ்வினி அருண்குமார் உடன் வாழ மறுத்துள்ளார்.
மேலும் திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் கணவன் அருள்குமார் தனக்கு 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனக்கூறி அருள்குமார் மீது அஸ்வினி புகார் அளித்துள்ளார்.
அதன் பின்னர் அஸ்வினி பெங்களூரில் உள்ள தன்னுடைய அம்மாவிடம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவ்வப்போது காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் இருவரையும் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தன் பிள்ளைகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு அருள்குமார் காவல் நிலையத்தில் போலீசாரிடம் கூறியுள்ளார்.
மேலும் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் கணவனின் நண்பருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு காரணமாக கணவரை விட்டு பிரிந்து சென்ற மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

admin
