கொளுத்தப்பட்ட யமாகா பைக்!

கொளுத்தப்பட்ட யமாகா பைக்!

ஜி.குலசேகரன்,

வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மீது தீ வைத்த மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த புது பூங்குளம் பகுதியை சார்ந்த மேகநாதனின் மகன் குமரன் (23) என்பவர் தனியார் பள்ளி பேருந்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

 இந்த நிலையில் குமரனுக்கு சொந்தமாக யமஹா  ஆர் 15 பைக் உள்ள நிலையில் வீட்டிற்கு வெளியே அந்த வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

 அப்போது நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ பைக்கிற்கு தீ வைத்துள்ளனர். சிறிது நேரத்திற்கு பிறகு ஏதோ வெடிப்பது போல் சத்தம் கேட்டுள்ளது. வீட்டில் வெளியே வந்து பார்த்த குமரன் அவருடைய இருசக்கர வாகனம் தீ மளமளவென பரவி எரிந்துள்ளது.

 இதனை பார்த்த குமரன்  அதிர்ச்சி அடைந்தும்  தண்ணீர் ஊற்றி தீயை அனைத்துள்ளார். எரிந்து நாசமான இருசக்கர வாகனத்தையும் கிராமிய காவல் நிலையத்திற்கு போலீசார் எடுத்து வந்தனர்.

 இது குறித்து குமரன் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மீது தீ வைத்த மர்ம நபர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.