தேர்தல் களத்தில் நேரடியாக இறங்கிய சபரீசன்! அதிமுக உஷார்!
ம.பா.கெஜராஜ்,
நடைபெறவிருக்கும் தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க திமுக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தற்போது வடமாவட்டங்களை வளைத்துப்போட்டு வருகிறார்.
அப்படியிருக்க திமுகவின் வெற்றிக்காக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் அவருக்கே உரிய பாணியில் களப்பணியாற்றி வருகிறறார்.
சபரீசனின் பெண் நிறுவன படையினர் உடனுக்குடன் சர்வேக்களை எடுத்து திமுகவின் சாதக பாதங்களை சமர்ப்பித்து வருகிறார்கள்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக அதிகமான பாலோயர்களுடன் இயங்கும் பிரபலமான முகங்களுக்கு தேவையான கன்டன்டுகளை கொடுத்து கருப்பு சிவப்பு சாயல் வராத அளவுக்கு அவர்களை திமுகவுக்கு ஆதரவாக பேச வைப்பதில் பெரும் பங்காற்று வருகிறது பெண் டீம்.
வேட்பாளர்கள் தேர்விலும் இவர்கள் பணி இம்முறை பிரதானமாக இருக்கும் என்கிறார்கள்
அப்படியிருக்க இத்தனை நாளும் சென்னையிலிருந்து கொண்டு தனது பரிவாரங்களை மாநில முழக்கி இயக்கி வந்த சபரீசன் தற்போது நேரடியாகவே களத்துக்கு வந்து கட்சியின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து தேர்தல் களம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
கட்சியினர் மட்டுமல்லாது அந்தந்த பகுதியில் மெஜாரிட்டியாக இருக்கும் சமூகங்களைச் சார்ந்த முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசி திமுகவுக்காக ஆதரவை திரட்டு வருகிறார் சபரீசன்.
சபரீசனுக்கு பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகபுரம் கிராமம் இங்குள்ள வீட்டில் தான் தென் மாவட்ட திமுக நிர்வாகிகளை அவ்வப்போது சந்தித்து அவர் ஆலோசனை நடத்துவார்.
ஆனால் இது தேர்தல் நேரம் என்பதால் மாவட்ட திமுக அலுவலகத்திற்கு விசிட் அடித்து கட்சி நிர்வாகிகளுடன் நேரடி சந்திப்புகளை அவர் நடத்தி உள்ளது உன்னிப்பாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இவரது செயல்பாடுகளை அதிமுக கண்காணிக்கிறது. நம்ம கட்சி முக்கியஸ்தர்களை அலேக்காக தூக்கிவிடப்போகிறார் சபரீசன் என்பதே அதிமுகவின் தற்போதைய கவலை.
கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் கட்சியுடன் சந்திப்பை சபரீசன் நடத்தி இருக்கிறார். தனது விசிட்டிங் போது தொகுதி பார்வையாளர்கள் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளை தொகுதி வாரியாக சந்தித்து பேசி வருகிறார்.
இதுவரை திரைமறைவிலேயே செயல்பட்டு வந்த சபரீசன் இம்முறை நேரடியாக கலந்து கொண்டிருப்பது அடுத்து அவரும் அதிகாரத்துக்கு வரலாம் என்ற பேச்சுக்கள் உள்ளது.

admin
