திருப்பத்தூரில் திமுக சார்பில் நடந்த கவனிப்பு!

  ஆர்.ரமேஷ்,

  திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் திமுக நிர்வாகி டி.கே.மோகன் என்பவருடைய ஏற்பாட்டின் படி ஆயிரக்கணக்காணோருக்கு உணவு அளிக்கப்பட்டது.

  கடந்த ஆண்டு பொங்கலின் போது தற்போதைய அமைச்சர் துரைமுருகன் காட்பாடி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் வழக்கம் போலவே கட்சியினரை சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது மேற்படி டி.கே.மோகன் சீர்வரிசை தட்டுகளை வரிசைக்கட்டி துரைமுருகனை குஷிபடுத்தினார்.

   அந்த வகையில் இந்த ஆண்டு பொங்களுக்கு அவர் அமைச்சர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற வரும் பொழுது வித்தியாசமான கெட்டப்பில் வருவார் என்று திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

  இந்நிலையில் திமுகவில் மாணவர் அமைப்பில் உள்ள, தொழிலதிபரான டி.கே.மோகன், பொதுமக்கள் மற்றும் திமுக,வினர் என ஆயிரக்கணக்கானோருக்கு  

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் ஆர்.காந்தி ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய கேலண்டர்களை

வழங்கினார்.கூடவே அனைவருக்கும் உணவு வழங்கி சிறப்பித்தார்.

   இது போன்ற பணிகளை இவர் கடந்த பத்து ஆண்டுகளாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.