ஐந்து வருட பாரத்தை ஜெயலலிதாவிடம் இறக்கிவிட்டேன்:-சசிகலா! செயற்கை பில்டப்:-ஜெயக்குமார்!

ஐந்து வருட பாரத்தை ஜெயலலிதாவிடம் இறக்கிவிட்டேன்:-சசிகலா! செயற்கை பில்டப்:-ஜெயக்குமார்!

ம.பா.கெஜராஜ்,

 ஐந்து வருடமாக என் மனதில் இருந்த பாரத்தை ஜெயலலிதாவிடம் இறக்கிட்டதாக ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு வந்த வி.கே.சசிகலா நிருபர்களிடம் சொன்னார். இது செயற்கையான பில்டப் என்று  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நக்கலடித்துள்ளார்.

இதுபற்றின விவரம் வருமாறு,

  சசிகலா பெங்களூரு பரப்பன அக்ராஹரத்திலிருந்து வந்த பின்னர் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று அரசியல் வாய் சவடால்காரர்கள் உளறினர்.

 ஆனால் அவர் அரசியலை விட்டு ஒதுங்கியிருக்க போவதாக சொன்னார். இருந்தாலும் ஆங்காங்கே கோவிலுக்கு போய் வருவதும், ஆதரவாளர் சிலரிடம் போன் செய்து பேசுவதுமாக சற்று சல சலப்பை ஏற்படுத்தி வந்தார்.

 இந்நிலையில் அ.தி.மு.க.வின் தலைமையை சசிகலா ஏற்பார் என்று மீண்டும் அரசியல் அவரை சுற்றியது.

 ஆனால் அவர் இதற்கு எதுவும் சொல்லவில்லை.

  இந்நிலையில் அ.தி.மு.க. மீது பாசம் இருந்தால் ஏன் அவர் ஜெயலலிதாவை இன்றுவரை சென்று பார்க்கவில்லை என்கிற கேள்வியை அ.தி.மு.க.பக்கமிருந்து வெளியிட்டனர்.

  யார் என்னை போகவிடாமல் தடுக்கிறார்கள் என்பது அனைவருக்குமே தெரியும் என்று சசிகலாவும் கூறீயிருந்தார்.,

 அதன் பின்னர் இன்று முதல் முறையாக ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றார் சசிகலா.

  முகத்தில் சோகம், கண்ணீர் பொங்கியபடி மரியாதை செலுத்திய சசிகலாவும் அவரது ஆதரவாளர்களும் அங்கு மலர்வைத்து வணங்கினார்கள்.

 அதன் பின்னர் அவர் ஐந்து ஆண்டுகளாக மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை தற்போது ஜெயலலிதாவிடம் இறக்கி வைத்திருப்பதாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

  மேலும் அ.தி.மு.க.வை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாதான் காப்பாற்றுவார்கள் என்று சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டார்.

  இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம், "சசிகலாவுக்குக் கொடுக்கப்படும் 'பில்டப்' செயற்கையானதாக இருக்கிறது. இயற்கையாக இல்லை என்று சிரிப்புக் காட்டியிருக்கிறார்.