79 கோடி மதிப்பீட்டில் புறவழி சாலை! எ.வ.வேலு பேட்டி!

79 கோடி மதிப்பீட்டில் புறவழி சாலை! எ.வ.வேலு பேட்டி!

ஜி.குலசேகரன்,

திமுக தொண்டர்கள் ராணுவ வீரர்கள் போல தயார் நிலையில் உள்ளனர்!கழகப் பணியாற்றுவதில் தமிழக முதல்வருக்கு கை வந்த கலை! 79 கோடி மதிப்பீட்டில் புறவழி சாலை அமைக்க அடிக்கல் நாட்டிய போது அமைச்சர் பேச்சு.

   திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளிப்பட்டு பகுதியில் திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கப்படவிருக்கிறது.

 அந்த வகையில், நகருக்கு வெளியே 79 கோடி மதிப்பீட்டில்  சாலை அமைக்கும் பணியின்  துவக்க விழா நடைபெற்றது.

  இதில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.

  அப்போது செய்தியாளர்களை சந்தித்த எ.வ.வேலு, இந்த புறவழி சாலை அமைக்கப்பட்டால் கசிநாயக்கன்பட்டி,கதிரிமங்கலம், அச்சமங்கலம், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும்.

   அதேபோல முன்னாள் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகள் வெற்றி பெற்றோம்ராணுவ வீரர்கள் போல திமுக தொண்டர்கள் தயார் நிலையில் உள்ளனர். கழகப் பணியாற்றுவதில் தமிழக முதல்வருக்கு கைவந்த கலை என பேசினார்.

  இந்த நிகழ்வில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்ல தம்பி, மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

  அதே போல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதாக புதிய கட்டிடத்தை கட்டுவதற்கு பூமி பூஜை போட்டு நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்தார்.

 திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படும்மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் விவிபேட்ஸ்  ஆகியவற்றை சேமிப்பதற்காக கிடங்கை அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.

  நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ.வ. வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.