மோடி தோப்புகரணம் போட சொன்னால் பல்டி அடிப்பார் பழனிச்சாமி!பாஜகவின் டப்பா என்ஜின் முன் திமுக சூப்பர் பாஸ்ட் தலைகுனியாது! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
ஜி.குலசேகரன்,
மோடி தோப்புகரணம் போட வேண்டும் என்று கூறினால் நிறுத்த சொல்லும் வரை பல்டி அடிப்பவர் பழனிச்சாமி, மக்கள் விரோதிகளுக்கு ஷாக் தான் என் ஸ்டைல், எந்த டிரென்ட் இருந்தாலும், தமிழகத்தில் பிளாக் ஆன் ரெட் தான் டிரென்ட், பாஜகவின் டப்பா என்ஜின் முன் திமுக சூப்பர் பாஸ்ட் தலைகுனியாது, தமிழ்நாட்டு போரில், டெல்லி அணியா, தமிழ்நாட்டு அணியா திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேச்சு.
திருப்பத்தூர் மாவட்டம். ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் இன்று (14) திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடிகுழு மாநாடு நடைப்பெற்றது, இதில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
இதில் மாநாட்டில் அதிமுக முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர், நீலோபர் கபீல், அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார், அவருக்கு மு.க.ஸ்டாலின் திமுக சால்வை அணிவித்து வரவேற்றார்.
அதனை தொடர்ந்து விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், திருப்பத்தூரில் மக்கள் அளித்த உற்சாகம், இரட்டிப்பாகிறது, நாடாளுமன்ற தேர்தலை விட இப்போது அதிக திட்டத்தையும், கோரிக்கையும் நிறைவேற்றியுள்ளோம்.
2019 பிறகு வெற்றி மேல் வெற்றி, சதிகளை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம், இந்தியாவில் எந்த டிரென்ட் இருந்தாலும், தமிழகத்தின் டிரென்ட் பிளாக் ஆன் ரெட் தான்.
திராவிட மாடல் 2.0 ஸ்டார்ட், மீண்டும் உதய சூரியன் ஆட்சி ஸ்டார்ட்,அரசியல் ஆய்வாளர்கள் வியந்து பேசும் அளவிற்கு, 2026 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றி இருக்க வேண்டும், ஒவ்வொரு பூத்திலும் 350 வாக்குகள் டார்க்கெட், 2 கோடி 30 லட்சம் மேல் வாக்குகள் வாங்க வேண்டும்,
அது உங்களின் பொறுப்பு, உங்களுக்கு வேண்டிய உதவிகள் செய்வது என் பொறுப்பு.
200 தொகுதிகளில் வெற்றி பெற ஓய்வை மறந்து உழைக்க வேண்டும், சமூக வலைத்தளங்கள் வந்தாலும், மக்களிடம் நேரில் சென்று பிரச்சாரத்தின் கடைசி நிமிடம் வரை வாக்கு கேட்க வேண்டும், நமக்கு ஆதரவு கூடியிருக்கிறது.
செய்வோம் என ஆட்சிக்கு வந்தோம், சொன்னதை தாண்டி செய்து கெத்தாக மக்கள் முன் நிற்கின்றோம்.

வாக்கு செலுத்திவிட்டு அந்த பெட்டிக்கு சீல் வைக்கும் வரை கவனமாக இருக்க வேண்டும்.
திமுக ஆட்சி வந்தால், சுயமரியாதை ஆட்சி வரும் என மக்கள் மனதில் பதியவைக்க வேண்டும், அப்போது திமுகவின் திட்டங்களை மூச்சுவிடமால் கூறி, நான் கூறியது புத்தமாக உள்ளது, அதனை மனப்பாடம் செய்து, நோட்டீஸ் அடித்து கொடுங்கள்.
எந்த வீட்டில் நுழைந்தாலும், டி எம் கே பிரான்ட் தான் தெரிய வேண்டும், மகளீரை ஈர்க்க வேண்டும், அட்வான்ஸாக செயல்படுவதால் தான், டேக் ஆப்தி நேஷன்.
நேற்று காலை 1 கோடி 35 லட்சம் பெண்கள் முகத்தில் புன்னகை, முதல் ரிங்டோன் 5000 ரூபாய் மகளீர் உரிமைத்தொகை என்ற ரிங்டோன் தான்.
மகளீர் உரிமை தொகையை வழக்கு தொடுத்து, பாஜகவினர் நிறுத்தபார்த்தார்கள், அவர்கள் தமிழ்நாட்டிற்கு அவர்கள் எந்த திட்டமும் செய்யவிடமாட்டார்கள், மக்கள் விரோதிகளுக்கு ஷாக் தான் என் ஸ்டைல்.
பாஜகவின் கிளைகழக அதிமுக செயலாளர் தான் பழனிச்சாமி, தமிழ்நாட்டு மக்களுக்காக பேச தெரியாமல், முதுகெலும்பு இல்லாமல், கொத்தடிமை செய்யும் பழனிச்சாமி, அரசியல் தெரியாமல், சோசியல் மீடியாவில் பேசி வருகிறார்.

தவழ்ந்து வரும் பழனிச்சாமி சட்ட ஒழுங்கு பேச தார்மீக உரிமை இருக்கிறதா, பொல்லாத ஆட்சி, பொள்ளாட்சி சாட்சி அது ஆறாத வடு, உழவர்களுக்கு எதிரான சட்டங்களை ஆதரித்து, பச்சை துண்டு, போட்டு பச்சை துரோகம் செய்தவரை, மக்கள் மன்னிகமாட்டார்கள்.
இஸ்லாமியர்களும் மன்னிக்கமாட்டார்கள்,திமுக மீதான அவதூறு பேச்சை மக்கள் நம்பமாட்டார்கள், ஆயிரம் ஆண்டுகள் நின்று பேசும் சாதனையை 5 ஆண்டுகளில் செய்துள்ளோம்.
வட மாநிலங்கள் திமுக அரசை உதராணமாக கூறி பாராட்டி வருகின்றனா. பாஜகவின் டப்பா என்ஜின் முன் சூப்பர் பாஸ்ட் திமுக தலைகுனியாது, டப்பா என்ஜினில் ஏறி புறவாசல் வழியாக வரும் பாஜகை புறந்தள்ள வேண்டும்.
மோடி தோப்புகரதணம் போட வேண்டும் என்று கூறினால் நிறுத்த சொல்லும் வரை பல்டி அடிப்பவர் பழனிச்சாமி,
அதிமுக பாஜகவை யூஸ் செய்கிறது, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைக்க ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும், தமிழ்நாட்டு போரில், தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா, தமிழ்நாட்டை காக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என பேசினார்.

admin
