விஜய் கொள்ளையடித்த பணத்தை வெளியில் கொண்டுவரனும் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
ஜி.குலசேகரன்,
விஜய் முதலில் அவர் கொள்ளையடித்த பணத்தை வெளியே எடுத்து வர சொல்லுங்கள் விஜயின் நாடகம் இன்னும் கொஞ்சம் நாளில் வெளியே தெரியும், எங்கள் தகுதிக்கு அவருக்கு பதில் அளிக்க அவசியம் இல்லை திமுக கழக அமைப்பு செயாலளர் ஆர். எஸ் பாரதி பேட்டி.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் திமுக சார்பில் ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டம்!தமிழ்நாடு தலைகுனியது! என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் திமுக கழக அமைப்பு செயலாளர், ஆர்.எஸ்.பாரதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, சிறப்புரையாற்றினா£.
அப்போது கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, எங்களை எதிர்த்த கட்சியை காலில் மிதித்த கட்சி, சுண்டெலிக்கு எல்லாம், பயப்படமாட்டோம், இருக்கிற வரை தான் விசில் அடிக்க முடியும், வட ஆற்காடு திமுகவின் கோட்டையாக இருந்தது இந்த ஊரில் அவன் கூட்டம் கூட்டுகிறான்,நம் வீட்டு பிள்ளைகள் அவன் பின்னால் ஓடுகிறார்கள்.
திமுக இல்லையென்றால் நடிகன் வரமுடியுமா? இந்தி எதிர்பால் தான் தமிழ் படம் ஓடுகிறது, தமிழ்நாட்டில் இந்தி படம் ஓடாது, காரணம் திமுக நடத்திய இந்தி போராட்டம்.
போராடாமல் இருந்திருந்தால், ரயில் நிலையத்தில் வேலை செய்திருக்க வேண்டும்.எந்த கட்சியால் வாழ்ந்தார்களோ, தற்போது அந்த கட்சியை எதிர்க்கிறார்கள், அப்பாவிற்கு சோறுபோடாமல்,தந்தையை கழுத்தை நெறிப்பவன்,தாயை பாட்டிலால் அடிப்பவன் தங்களை எதிர்க்கிறார்கள்.
மேலும் பெண்கள் நீங்கள் தான் வீட்டிற்குள் சென்று வாக்கு கேட்க வேண்டும், மீண்டும் ஸ்டாலின் ஆட்சியமைக்க உழைக்க வேண்டும் என பேசினார்.
கூட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ். பாரதி வேலூர் மாவட்டம், கொல்லமங்கலத்தில், நடைப்பெற்ற, தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் திமுகவை சாடியது பற்றி
கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த ஆர்.எஸ்.பாரதி, விஜய் முதலில் அவர் கொள்ளையடித்த பணத்தை வெளியே எடுத்து வர சொல்லுங்கள்,
காரணம் சென்னை உயர் நீதிமன்றத்தால் ஒன்றரை கோடி அபராதம் விதிக்கப்பட்ட மனிதர் தான் விஜய், அவர் வந்து எங்களை பேசுவது, எங்கள் தகுதிக்கு நாங்கள் பதில் சொல்ல அவசியமில்லை.
காரணம் யார் கொள்ளை அடித்தது யார் பணம் வாங்கி இப்படி செய்கிறார் என்ன நாடகம் இன்னும் கொஞ்ச நாள் வெளிச்சத்திற்கு வரப்போகிறது.
இவ்வளவு பேசுபவர் ஏன் மோடியை பற்றி பேசவில்லை, யார் யார் மூலம் தாக்கி பேச பார்க்கிறார்கள், திமுக ஆட்சி வருவதை தடுக்க முடியாது.
அடிக்க அடிக்க, பந்து உந்தும் அரை அரைக்க சந்தனம் மணக்கும், திமுகவை திட்ட திட்ட வெற்றிகள் குவியம் என பேட்டியளித்தா£.

admin
