பாலாற்றில் வெள்ளம்! மக்களுக்கு எச்சரிக்கை!
என்.பிலால்,
வாணியம்பாடி பாலாற்றில் அதிக வெள்ளம் வர வாய்ப்புள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
கர்நாடகா மாநிலம், கோலர் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே உள்ள பேத்தமங்களம் அணை நிரம்பி நீர் வெளியேறி வருகிறது.
தமிழக ஆந்திரா எல்லை பகுதியான பெறும்பள்ளம் என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பனையில் இருந்து வினாடிக்கு 300 க.அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் பேத்தமங்களம் அணையில் இருந்து உபரிநீர் வெளியேறி வருவதால் பாலாற்றில் அதிக அளவு வெள்ளம் வர வாய்ப்புள்ளது.
எனவே, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பாலாற்று கரையோர கிராமங்களான புல்லூர், திம்மாம்பேட்டை, ஆவரங்கும்பம், வடக்குபட்டு, இராமநாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி ஏக்லாஸ்புரம், தேவஸ்தானம், பழைய வாணியம்பாடி, வாணியம்பாடி நகரம் உதயேந்திரம், கிரிசமுத்திரம், மற்றும் வளையாம்பாட்டு ஆகிய கிராம மக்கள் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ கூடாது.
மேலும், கிராம பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க மற்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாணியம்பாடி நீர்வளத்துறை பாசனப்பிரிவு உதவிப்பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

admin
