தேடப்படும் குற்றவாளி ரிஜிஸ்தர் ஆபிசுக்கு வந்தது எப்படி? வாணியம்பாடி இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி சஸ்பெண்டு!

 தேடப்படும் குற்றவாளி ரிஜிஸ்தர் ஆபிசுக்கு வந்தது எப்படி? வாணியம்பாடி இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி சஸ்பெண்டு!

 ம.பா.கெஜராஜ்,

 கடந்த 10 ஆம் தேதி வாணியம்பாடி நகரில் நடந்த கொலை தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை வேலூர் சரக டி.ஐ.ஜி. திரு.ஏ.ஜி.பாபு இ.கா.ப.அவர்கள் எடுத்து வருகிறார்கள்.

 அந்த வகையில் தற்போது வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி  சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

  கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். ஆர்.சிபி சக்கரவர்த்ரி.கா.ப. தலைமையில் ஜீவா நகர் பகுதியில் டீல் இம்தியாஸ் என்பவர் கிடங்கில் 10 பட்டாக்கத்திகள்,10 செல்போன், 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து 4 பேர் கைது செய்தனர்.

  ஆனால் இந்த குற்ற செயலின் முக்கியமானவராக கருதப்பட்ட டீல் இம்தியாஸ் உட்பட 2 பேரை கைது செய்வதில் போலிசார் சுணக்கம் காட்டினர். குறிப்பாக இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி இதில் ரொம்பவே பாரபட்சம் காட்டி வந்துள்ளார்.

  பெண் சாராய வியாபாரிகளின் வீடுகளில் தங்கி ஓய்வெடுக்கும் பழக்கம் கொண்டவரென பெயர் பெற்ற காதல் மன்னன் கோவிந்தசாமி மேற்படி இம்தியாஸை கைது செய்யாமல் இருக்க பற்பல பலனடைந்ததாக பேசப்பட்டு வந்தது.

  மேற்படி குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இம்தியாஸ் போலிசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் ஹாயாக வாணியம்பாடி சப் ரிஜஸ்ட்ரார் அலுவலகத்துக்கு வந்து சென்றுள்ளார்.

 இதை இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி கூலாக வேடிக்கை பார்த்தாரே தவிர, நன்றி விசுவாசத்துக்காக கைது நடவடிக்கை எடுக்கவில்லை.

 அதுமட்டுமின்றி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் பார்ட்டியை மையப்படுத்தி வாணியம்பாடியில் பெரிய நிகழ்ச்சியெலாம் அவர்கள் நடத்தியுள்ளார்கள்.

 இதற்கு காவல் துறையைச் சேர்ந்த சிலர் பக்கபலமாக இருந்துள்ளனர்.

 இது போன்ற மெத்தனத்தால், கஞ்சா வழக்கில் தேடப்பட்டு வந்த இம்தியாஸ் அன்ட் டீம் சர்வ சாதாரணமாக வலம் வந்துள்ளார்கள். இதுவே ம.ஜ.க. நிர்வாகி வசீம் அக்ரமை கொலை செய்ய வகை தேடிக் கொடுத்துள்ளது.

 குறிப்பாக சொல்ல வேண்டுமானால்வாணியம்பாடி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமியிடம் வசீம் அக்ரம் நேரில் பல முறை சந்தித்து புகார் தெரித்துள்ளார். கஞ்சா கடத்தல்காரர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்ஸ்பெக்டர் அதை பற்றி காதில் போட்டுக் கொள்ளவில்லை.

  இந்நிலையில் தான் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.

  வேலூர் சரக டி.ஐ.ஜி., ஏ.ஜி.பாபு இ.கா.ப. அவர்கள் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

 

 

குறிப்பு:-வாணியம்பாடி டி.எஸ்.பி., திருப்பத்தூர் எஸ்.பி. வாணியம்பாடி இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது நடவடிக்கைகள் தொடரும் நிலையில் மேலும் பல போலிசார் மீது ஆக்ஷன் இருக்கும் என்றும், அதற்காக சில போலிசாரின் எக்ஸ்ட்ரா செல் எண்களையும் ஆய்வு செய்யப் போவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.