போலீசாருக்குள் மல்லுக்கட்டு எஸ்.பி.நடவடிக்கை! திருட்டு மணல் எதிரொலி!!
கு.அசோக்,
வாலாஜா காவல் நிலையத்தில் பழிக்கு பழி தீர்த்த காவலர்கள் - எஸ்பி உத்தரவால் இருவர் ஆயுத படைக்கு மாற்றம்.சட்ட விரோதமாக மணலை ஓட்டிக்கொண்ட போலீசை காட்டி கொடுத்த போலீசாரால் இராணிப்பேட்டை மாவட்ட காவல் நிர்வாகம் அதிர்ச்சி.
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா காவல் நிலையத்தில் ஆய்வாளர் உட்பட 10 க்கு மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இந்த காவல் நிலையத்தில் பணியாற்றிய இரண்டு காவலர்கள் காவல் நிலையத்தில் கட்ட பஞ்சாயத்து, மனுக்கள் முறையாக விசாரிக்காமல் கையூட்டு வாங்குவது என காவலர்களுக்குளே காவல் கண்காணிப்பாளர் வரை போட்டு கொடுத்ததால் கொண்டபாளையம், பானாவரம் ஆகிய இரு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த இரு காவலர்கள் சேர்ந்து தற்போது காவல் நிலையத்தில் பணிபுரியும் மாமன், மச்சானா சம்பத்குமார், மணிகண்டன் ஆகிய இருவரை காட்டிக் கொடுத்தனர்.
மேற்படி மாமன் மச்சான்கள் வாலாஜா அணைக்கட்டு பகுதியில் புதியதாக இடம் வாங்கி வீடு கட்டுமான பணியில் உள்ளனர்.
இந்த நிலையில் கட்டுமான பணிக்காக வாலாஜா பாலாற்றில் இருந்து சட்ட விரோதமாக மணல் எடுத்து வருவதாக தெரிகிறது.
அதற்காக கொள்ளையர்களுடன் தனது காக்கி சட்டையின் அதிகாரத்தை பயன்படுத்தி வீடு கட்ட மணலை கொண்டு வந்துள்ளனர்.
இதனை அறிந்த வாலாஜா காவல் நிலைத்திலிருந்து ஏற்கனவே மாற்றப்பட இரு காவலர்கள் ஒன்றாக கைகோர்த்து மாமன் மச்சான் போலீசாரை காட்டிக் கொடுத்தனர்.
அவர்கள் வீடு கட்டும் இடத்தில் வைத்துள்ள மணலை புகைப்படத்தை எடுத்து காவல் கண்காணிப்பாளர், டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு அனுப்பி உள்ளனர்.
இதனையடுத்து உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் சம்ப இடத்துக்கு சென்ற வாலாஜா இன்ஸ்பெக்டர் சக்திகணேஷ் நேரில் சென்று விசாரணை செய்ததில் சட்ட விரோதமாக மணல் கொள்ளையர்கள் மூலம் மணலை கொண்டு வந்தது ஊர்ஜீதமானது.
அப்படியிருக்க வாலாஜா இன்ஸ்பெக்டர் சக்தி கணேஷ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் எஸ்.பி அய்மன் ஜமால் இரு காவலர்களான மணிகண்டன், சம்பத்குமார் ஆகிய இருவரையும் அதிரடியாக ஆயுத படைக்கு மாற்ற உத்தரவிட்டா£.
வாலாஜா காவல் நிலையத்தில் நான்கு காவலர்களிடையே ஏற்பட்ட மோதலால் ஒருவர் மாறி ஒருவர் உயர் அதிகாரிகளுக்கு போட்டுக் கொடுத்ததில் இருவர் ஆயுத படைக்கும், இருவர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்ட சம்பவம் காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

admin
