ஆடு திருட பயன்படும் சொகுசு கார்!

ஆடு திருட பயன்படும் சொகுசு கார்!

ஜி.கே.சேகரன்,

ஜோலார்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்தடுத்து காரில் 13 ஆடுகள் திருட்டு! பொதுமக்கள் பீதி! போலீசார் விசாரணை.

  திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி கலகன் வட்டப்பகுதியைச் சேர்ந்த கண்ணப்பன் மகன் ரமேஷ் (54) விவசாயி இவர் நான்கு ஆடுகள் மற்றும் 10 ஆடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார்.

  இந்த நிலையில் நேற்று வழக்கம் போல ஆடு மாடுகளை மேய்த்து விட்டு தனது கொட்டகையில் கட்டிவிட்டு இரவு தூங்க சென்றார்.

  இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு 12 மணியளவில்  காரில் வந்து ஒன்பது ஆடுகளை திருடி சென்றுள்ளனர்.

 ஆடு கத்தியதை அறிந்த ரமேஷ் வெளியே வந்து பார்ப்பதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் கார் அங்கிருந்து சென்றுள்ளது.

 பின்னர் கொட்டகையில் வந்து பார்த்தபோது தான் வளர்த்து வந்த ஒன்பது ஆடுகள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 பின்னர் இது குறித்து இன்று ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

  மேலும் அதேபோல சின்ன பொன்னேரி பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி (75) என்பவருடைய கொட்டகையிலிருந்து நான்கு ஆடுகளை மார்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

 மேலும் இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 அரை கிலோமீட்டர் தொலைவில் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் ஆடு திருட்டு சம்பவம் நடைபெற்ற சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.