வேலூரில் அஞ்சலக வார பேரணி!

வேலூரில் அஞ்சலக வார பேரணி!

கு.அசோக்,

வேலூர் அஞ்சல் கோட்டதில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் "தேசிய அஞ்சல் வாரம்" 06.10.2025 முதல் 10.10.2025 வரை கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக இந்திய அஞ்சல் துறை சார்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக "உலக அஞ்சல்" தினத்தினை  வேலூர் அஞ்சல் கோட்டம் சார்பாக நடைபயண பேரணி மேற்கொள்ளப்பட்டது.

  இந்த நடைபயண பேரணியில் ராஜகோபாலன் - வேலூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முரளி - முதுநிலை அஞ்சல் அதிகாரி. சுவாமிநாதன் -தலைமையிடத்து உதவி கண்காணிப்பாளர். காசிநாதன் - கிழக்கு உட்கோட்ட உதவி கண்காணிப்பாளர், ஜெயபாரதி - மேற்கு உட்கோட்ட ஆய்வாளர், ஜெயபால் அஞ்சல் ஆய்வாளர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அஞ்சல் பனியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.