5 டன் பட்டாசுகளுக்கு சீல்!

5 டன் பட்டாசுகளுக்கு சீல்!

ஜி.கே.சேகரன்,

  நாட்றம்பள்ளி அருகே அனுமதி இல்லாமல் 5 டன் பட்டாசுகளை பதுக்கிய கிடங்கிற்கு சீல்- நாட்றம்பள்ளி வட்டாட்சியர் நடவடிக்கை.

  திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த திரியாலம் பகுதியில் திருப்பதி (53) என்பவர் பட்டாசு கடை நடத்தி வருகிறார். அனுமதி பெற்ற கடையை தவிர்த்து அனுமதி பெறாத இடத்தில் முறைகேடாக 5 டன் பட்டாசுகளை பதுக்கி வைத்து இருந்துள்ளார்.

   இது குறித்து நாட்றம்பள்ளி வட்டாட்சியர் காஞ்சனாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அதன் பேரில் காஞ்சனா சென்று பார்த்த போது தகவல் உறுதியான நிலையில் ஜோலார்பேட்டை போலீஸாருக்கு தகவல் அளித்து போலீசாரின் பாதுகாப்போடு நாட்றம்பள்ளி வட்டாட்சியர் காஞ்சனா பதிக்க வைத்த பட்டாசு கிடங்கிற்கு சீல் வைத்தார்.   

  தீபாவளி பண்டிகை நெருங்குவதை ஒட்டி பதுக்கி வைத்த பட்டாசு   குடோனிற்கு சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.