கிராம சபை கூட்டத்தை கட்சி மேடையை ஆக்கிய வேலூர் எம்பி!

கிராம சபை கூட்டத்தை கட்சி மேடையை ஆக்கிய வேலூர் எம்பி!

ஜே.தேவபிரகாஷ்,

திமுகவின் பெருமைகளைப் பற்றியும் டிவி கே தலைவர் பற்றியும் பேசியபோது இது கட்சி மேடை அல்ல என வாக்குவாதத்தில் ஈடுபட்ட பேரணாம்பட்டு கிழக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர் தமிழக வெற்றி கழக கட்சி சேர்ந்தவர்.

  இது கட்சி மேடை இல்லைடா ஆனால் பேசுவேன் என ஒருமையில் திட்டிய எம்பி..

மக்களவை உறுப்பினர் கேள்வி கேட்டு மக்களை தரம் உற்ற முறையில் பேசுவதா கொதித்தெழுந்த மக்கள்

வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழக கட்சியைச் சேர்ந்தவரை மிரட்டிய திமுக வினர்

கூட்டத்தை விட்டு காவல் துறையினர் வாக்குவாதத்தை ஈடுபட்ட தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவரை வெளியேற்றியதால் பரபரப்பு

 

   வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியம் மேல்பட்டியில் நடந்த கிராமசபா கூட்டத்தில் வேலூர் எம்பி கதிர் ஆனந்த் கலந்து கொண்டார். இவர் திமுகவைச் சேர்ந்தவர் ஆவார்.

அப்போது அவர் கிராமசப கூட்டத்தில் அந்த கிராம மக்களிடம் பேசும்போது முதலமைச்சர் பெருமையும் பற்றி பேசிக் கொண்டிருந்தார் பின்பு கரூரில் நடைபெற்ற விஜயின் பிரச்சாரத்தின் தள்ளுமுள்ளு காரணமாக 41 உயிர் இழப்பு ஏற்பட்டபோது டிவிகே தலைவர் சம்பவ இடத்தில் இல்லாமல் தப்பி வீட்டிற்கு சென்று விட்டான் என்று அடாவடியாக பேசினார்.

  மேலும் முதலமைச்சர் அந்த சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆறுதல் வழங்கினார் என திமுக பெருமைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்

   அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த பேரணாம்பட்டு கிழக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ஆனந்தன் இது கிராமசபா கூட்டம் மக்கள் குறையை கேட்பதை விட்டுவிட்டு  திமுக பெருமைகளை பேசி வருகிறீர்கள்.

  இந்தப் பகுதி மக்கள் குறையே அதிகம் இருக்கிறது அதைக் கேட்டு அறியாமல் நீங்கள் ஏன் கட்சி கூட்டம் போல பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று எதிர்கேள்வி கேட்டார். அதற்கு அவரை திமுகவினர் பேச விடாமல் தடுக்க முனைந்தனர்.

    நீங்கள் பேசும்போது நாங்கள் கைகட்டி பார்க்க வேண்டுமா? விஜயின் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது அதை பற்றி தற்போது பேச வேண்டிய அவசியம் என்ன என அந்தப் பகுதியை சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த ஆனந்தன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

  அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்  அந்த நபரிடம்  ஒருமையில் இது கட்சி மேடை இல்லடா ஆனால் நான் முதலமைச்சரை பற்றி பேசுவேன் என பேசினார்

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 எம்பி பேசியதை கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.

  இந்நிலையில்  அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டவரை திமுகவினர் சுற்றிவரத்து மிரட்டினர் மேலும் காவல்துறையினர் அவரை அங்கிருந்து வேகமாக அப்புறப்படுத்தினார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.