அதிமுக கூட்டணிக்கு விஜய் - எம். எல் .ஏ. ஜெகன் மூர்த்தி கருத்து!

அதிமுக கூட்டணிக்கு விஜய் - எம். எல் .ஏ. ஜெகன் மூர்த்தி கருத்து!

ஜே.தேவபிரகாஷ்,

  அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்துட்டாரா என்பது அதிகபூர்வமாக தெரியவில்லை

 ஆனால் தொண்டர்கள் அதிமுக கூட்டணிக்கு வர விருப்பப்படுகிறார்கள் எனவே தான் எடப்பாடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் தவெக கொடிகளை  பறக்க விடுகின்றனர்     

அதிமுக கூட்டனிக்கு வர அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டி

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்முட்டுக்கூர் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

 அப்பொழுது குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் இருந்து வரும் கழிவுநீர் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் கலந்து நிலத்தடி நீர் மாசுபடுகிறது, இதனை முற்றிலும் தடுக்கும் வகையில் 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சிக்கு சொந்தமான மேல்மூட்டூகூர் ஊராட்சியில் உள்ள உள்ளி கூட்ரோடு உரக்கடங்கு பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது.

   இங்கு  சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர் மாசுபடும் எனவும் சுகாதார சீர்கேடு ஏற்படும் எனவே மேல்முட்டுக்கூர் ஊராட்சியில் இருந்து இதனை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என கிராமசபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினரும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான ஜெகன்மூர்த்தி தீர்மானத்தில் கையெழுத்திட்டார்

  அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெகன் மூர்த்தி,அதிமுக கூட்டணிக்கு தவெக வந்துவிட்டதா என தெரியவில்லை ஆனால் தவெக கட்சி தொண்டர்கள் அதிமுக கூட்டணியை  விரும்புகின்றனர்.

  அதிமுக கூட்டணியில் சேர வேண்டும் என ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனாலதான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்களில் கட்சி கொடியை தவெக தொண்டர்கள் பறக்க விடுகின்றனர் தொண்டர்கள் விருப்பத்தை விஜய் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

   கரூரில் நடைபெற்ற நிகழ்வில் இந்த சூழ்நிலையில் விஜய் அவர்களுக்கு யாரும் பாதுகாப்பாகவும் ஆதரவாகவும் இல்லாத நேரத்தில் எதிர் கட்சி தலைவர் எடப்பாடி விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்.

புரட்சி பாரதம் கட்சி நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மகக்ளுக்கு ஆறுதல் தெரிவித்தது. இந்த கலவரத்தில் சிபிஐ விசாரணை செய்ய வேண்டும்.

ஒரு கூட்டத்தை நடத்துபவர்கள் அவர்களே கலவரத்தை  உருவாக்க மாட்டார்கள் ஆகவே  சிபிஐ விசாரணை என்பது தேவை.

 மேலும் முட்டுக்கூர் ஊராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது அமைத்தால் அடுத்த கட்டமாக பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என எம்எல்ஏ ஜெகன் முத்தி தெரிவித்தார்.

   இதனிடையே கிராம சபா கூட்டம் முடிந்து திரும்பி வந்த வேலூர் எம்பி கதிர் ஆனந்த் மற்றும் குடியாத்தம் எம்எல்ஏ அமலு  ஆகியோர் டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்தனர்

 அப்பொழுது கே.வி. குப்பம் எம்எல்ஏ ஜெகன்மூர்த்தி மற்றும் கே வி குப்பம் முன்னாள் எம்எல்ஏ (அதிமுக )லோகநாதன் ஆகியோர் அங்கு டீ குடிப்பதற்காக வந்தனர்

  அப்பொழுது திமுக எம்பி கதிர் ஆனந்த் மற்றும் ஜெகன் மூர்த்தி ஆகியோர் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டு மகிழ்ச்சியாக பேசி சென்றனர்