முட்டி மோதிக்கொள்ளும் மகேஷ், சுரேஷ்! குமரி திமுகவில் பரபரப்பு!
அ.கார்த்தீஷ்வரன்,
2026-ல் நடக்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேர்தலில் திமுகவில் மீண்டும் சீட் பெற முதல்வர் குடும்ப நண்பர் என்ற நெருக்கத்தில் சுரேஷ் ராஜன் முயன்று வருகிறார். அதே கட்சியில் எதிர்முனையில் உள்ள வர் மகேஷ்.
இவர் நாகர்கோவில் மாநகராட்சி மேயராகவும் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் வும் உள்ளார்.
மகேஷ் தேர்தலில் சீட் பெற தீவிரம் காட்டி வருகிறார். அவர், தனது சொந்த தொகுதியான நாகர்கோவிலில் போட்டியிடும் வகையில் மாநகராட்சியின் 52 வார்டு பகுதிகளிலும் வளர்ச்சி பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
குமரி மாவட்டத்தில் சிட்டிங் அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ் முதலில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்தபோது, அவரது மகன் ரெமோனின் அதிவேக செயல்பாட்டால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதாக தலைமைக்கு புகார்களை மேயர் மகேஷ், சுரேஷ் ராஜன் தரப்பினர்கொண்டு சென்றனர். இதனால் மனோ தங்கராஜின் பதவி பறிக்கப்பட்டது.
ஆனாலும் பால்வளத்துறையை ஒதுக்கி மீண்டும் மனோதங்கராஜை திமுக தலைமை மீண்டும் அமைச்சராக்கியது.
குமரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் மனோ தங்கராஜுக்கு கிடைக்கும் மரியாதையை பார்த்து பிரமித்துப்போன மேயர் மகேஷ், மாநகர தந்தையாக தான் பொறுப்பில் இருந்தாலும், அமைச்சர்தான் ஒரு மாவட்டத்தின் முக்கிய ஆளுமை. எனவே, அந்த பொறுப்பை பிடித்தே தீருவேன் என வெளிப்படையாகவே சொல்லி வருகிறார்.
அதற்கேற்ப முதல்வர் வெளிநாடு செல்லும் போது வழியனுப்புவது, கனிமொழி எம்.பி. சார்ந்த விழாக்கள், முதல்வரின் மருமகன் சபரீசன் குடும்ப நிகழ்ச்சி என ஒன்று விடாமல் ஆஜராகி வருகிறார்.
இதனால் முதல்வரின் நெருங்கிய நண்பராக வலம் வந்த சுரேஷ் ராஜன் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார்.
நாகர்கோவில் தொகுதியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று தனது ஆதரவாளர்களிடம் கூறி வரும் அவர், தேர்தலில் சீட் பெற தற்போது முதலே கட்சி தலைமையிடம் முண்டியடிப்பதாக தெரிகிறது.
ஆனால், கடந்த முறை நாகர்கோவில் தொகுதியில் தோல்வியடைந்த சுரேஷ் ராஜனை அவர் தரப்பு வாக்குகள் நிறைந்த கன்னியாகுமரி தொகுதிக்கு அனுப்பிவைக்குமாறு தனக்கு நாகர்கோவில் தொகுதியை தந்தால் ஜெயித்து காட்டுவேன் என்றும் தொடர்ச்சியாக கட்சி தலைமையிடம் மேயர் மகேஷ் வலியுறுத்தி வருகிறார்.
ஆக மகேஷ் சுரேஷ் திமுகவில் குமரிமாவட்டம் கொதிக்கும் நிலைக்கு வந்துவிட்டது.

admin
