மயங்கிய ஆசிரியை.... அலேக்காக தூக்கிசென்ற பெண் காவலர்!
ம.பா.கெஜராஜ்,
சம வேலைக்கு சமஊதியம் வழங்கக்கோரி சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
சாலையில் அமர்ந்து போராடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆசிரியை மகேஸ்வரி என்பவர் மயங்கி விழுந்தார்.
அவரை பெண் காவலர் அலேக்காக தூக்கிச்சென்று அவருக்கு முதல் உதவி அளிக்க உதவினார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 31.5.2009-ல் பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும் அதற்கு பின்னர் 01.06.2009 என ஒரு நாள் வித்தியாசத்தில் சேர்ந்தவர்களுக்கும் அடிப்படை சம்பளத்தில் சுமார் 15 ஆயிரம் வேறுபாடு இருந்து வருகிறது.
அதாவது ஒரு நாள் முன்னர் சேர்ந்தவர்களுக்கு ரூ.80,000 மும், மறுதினம் சேர்ந்தவர்களுக்கு ரூ.65,000/சம்பளமும் வழங்கப்படுகிறது.
இந்த ஊதிய முரண்பாட்டை கண்டித்து சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக் கையை வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.
அப்படியிருக்க டிச.26-ம் தேதி காலை 10.30 மணிக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உள் ளிட்ட கல்வித்துறை அலுவலகங்கள் அமைந்துள்ள டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து வளாகத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
போராட்டத்துக்காக வெளியூர்களில் இருந்து வந்த இடைநிலை ஆசிரியர்களை நுங்கம் பாக்கம், எழும்பூர் ரயில்நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் வழிமறித்து போலீஸ் வாக னங்களில் ஏற்றிச்சென்றனர்.
இந்நிலையில், காலை 11.30 மணியளவில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் மற்றும் நி£ வாகிகள் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது அவர்களை போலீசார் வலுக்காட்டாயமாக இழுத்துச்சென்றனர். இந்த சம்பவத்தில் மகேஷ்வரி எனிற ஆசிரியை மயங்கி விழுந்தார். அவரை பெண் காவலர் தூக்கிச்சென்று காப்பாற்றினார்.
ஜனவரி துவக்கத்தில் ஜேக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் இந்த போராட்டங்கள் மேலும் வலுக்கும் என்று தெரிகிறது.

admin
