ஊழல் மாணிய திட்டங்களை நிறுத்த விவசாயிகள் தீர்மானம்!
கு.அசோக்,
விவசாயிகளின் அனைத்து கடன் களையும் ரத்து செய்ய வேண்டும் ஆண்டுதோறும் விவசாயிகளின் வங்கி கணக்கில் உற்பத்தி மாணியமாக ரூ.30 ஆயிரம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது
இராணிப்பேட்டைமாவட்டம், ஓச்சேரியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டமானது வடிவேல் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் சண்முகசுந்தரம்,நிறுவனர் ஈசன் முருகசாமி உள்ளிட்டோரும் திரளான விவசாயிகளும் கலந்துகொண்டனர்.
டிசம்பர் 28 அன்று ஈரோட்டில் லட்சம் விவசாயிகள் திரளும் விவசாயிகள் உரிமை மீட்பு கடன் விடுதலை மாநாடு நடக்கவுள்ளது.

அரசு விவசாயிகளின் அனைத்து கடன் களையும் ரத்து செய்ய வேண்டும், ஊழல் மாணிய திட்டங்களை நிறுத்திவிட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் ஆண்டுதோறும் உற்பத்தி மாணியம் ரூ.30 ஆயிரம் அளிக்க வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறை வஃக்பு வாரியமும் விவசாயிகளின் உரிமை பெற்ற 13 லட்சம் ஏக்கர் நிலங்களை பூஜ்ஜியம் மதிப்பு பெற்று உரிமை கொண்டாடுவதை தடை செய்து அனைத்து மாநிலங்களிலும் இனாமாக நிலம் அளிப்பதை போல் விவசாயிகளின் நில உரிமையை மீட்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

admin
