எஸ். ஐ. ஆர் படிவங்களுடன் தனிகுழு! விரட்டியடித்த அதிகாரிகள்!
கு.அசோக்,
சோளிங்கரில் வீடுதோறும் விநியோகிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவங்களை ஒரு குழுவினர் தன்னிச்சையாக பூர்த்தி செய்வதாக புகார் அதிகாரிகள் அந்த நபர்களை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சோளிங்கர் நகரம், நாரைகுளமேடு பகுதியில் பாகம் எண்.40-இல் வீடு தோறும் விநியோககிக்கப்பட்ட படிவங்களை ஒரு குழுவினர் அம்மன் கோயிலில் முகாம் அமைத்து பூர்த்தி செய்வதாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் பறந்தது.
புகாரின் பேரில் சோளிங்கர் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மீனா தலைமையில் வட்டாச்சியர் செல்வி மற்றும் வருவாய்த் துறையினர் நேரடியாக சென்று சம்மந்தப்பட்ட நபர்களை எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர், அப்பகுதி மக்களுக்கு படிவங்கள் பூர்த்தி செய்வது தொடர்பாக சந்தேகம் இருப்பின் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தினை அணுகி தீர்வு பெற்றுக் கொள்ள தெரிவிக்கப்படும் என்றி தெறிவித்தனர். அப்போது தேர்தல் துணை வட்டாட்சியர் பிள்ளையார் கிராம நிர்வாக அலுவலர் கணேஷ் மற்றும் வருவாய் துறையினர் உடனிருந்தனர்.

admin
