வேலூர் எம்பி கதிர் ஆனந்துக்கு நீதிமன்றம் கிடுக்கிபிடி......!சக வழக்காடிக்கு வாரண்டு!

  வேலூர் எம்பி கதிர் ஆனந்துக்கு நீதிமன்றம் கிடுக்கிபிடி......!சக வழக்காடிக்கு வாரண்டு!

ஜி.கே.சேகரன்,

 வழக்கில் உள்ளவர்கள் அனைவரும் வரவேண்டும் என்று எம்பி கதிர் ஆனந்துக்கு நீதிமன்றம் கிடுக்கிபிடி போட்டது.

 கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது சுமார் 11 கோடி ரூபாய் கதிர் ஆனந்த் தரப்பில் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கிற்காக வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் எம்பி கதிர் ஆனந்த் நேற்று ஆஜர் ஆனார்.

 ஆனால் இந்த வழக்கில் உள்ள பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் தாமோதரன் இருவரும் ஆஜராகவில்லை. 

  எனவே அவர்களுடன் மாலை 4:30 மணிக்கு மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

 வேலூர்மாவட்டம்2019-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற வழக்கின் விசாரணைக்காக வேலூர் நீதிமன்றத்தில் திமுக எம்.பி., கதிர்ஆனந்த் ஆஜரானார்.

  தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

   இதன் தொடர்ச்சியாக கதிர் ஆனந்துக்கு நெருக்கமான திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் தாமோதரன் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பம் கிராமத்தில் தாமோதரனுக்குச் சொந்தமான சிமென்ட் குடோனில் இருந்து திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரூ.10.48 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.

  மேலும், வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர்கள் விவரங்கள் அடங்கிய ஆவணங்களுடன் புத்தம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த 200 ரூபாய் நோட்டு கட்டுகள் பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்டன.

  இது தொடர்பாக, காட்பாடி காவல் நிலையத்தில் அப்போதைய தேர்தல் கணக்கு அலுவலர் சிலுப்பன் அளித்த புகாரின் பேரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் தாமோதரன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

  வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணை வேலூர் ஜெ.எம் 1 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

  இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக வேலூர் தொகுதி எம்.பி.யாக உள்ள கதிர் ஆனந்த் ஆஜரானார்.

 பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் தாமோதரன் இருவரும் இன்று ஆஜராகாததால் இவர்களுடன் இன்று மாலை 4:30 மணிக்கு மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

   அப்படியிருக்க மாலையில் கதிர் ஆனந்தும் தாமோதரன் என்பவரும் ஆஜரானார்கள். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் ஒருவரவரான பூஞ்சோலை சீனிவாசன் என்பவர் ஆஜராகததால் அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தத்து.

  கடந்த இரண்டு நாட்களில் மூன்று முறை சிட்டிங் எம்பி நீதிமன்றத்துக்கு வந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.