பிரதமர்... ஆளுநர்.... முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து!

ஜி.சாந்தகுமார்,
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரை துறை பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 70-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும், கலைஞர் கருணாநிதி நினைவிடத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
"முயற்சி. முயற்சி.. முயற்சி... அதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். "என பதிவிட்டுள்ளார். மேலும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதே போல்நடிகர் ரஜினிகாந்த், இசையமைச்சாளர் இளையராஜா உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "70-வது பிறந்தநாள் காணும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அதே போல் தே.மு.தி.க. தலைவர் விஐஅகாந்த், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளோடு, பொது வாழ்வில் இன்னும் பல ஆண்டுகள் அவரது பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!"என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பு: இன்று மாலை சென்னை, நந்தனத்திலுள்ள ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் தேசிய தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.