காணொளி மூலமாக முதல்வர் திறந்த மருத்துவமனை பணி!

காணொளி மூலமாக முதல்வர் திறந்த மருத்துவமனை பணி!

 த.நெல்சன்,

  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கான கட்டடம் கட்டும் பணிகளை காணொலி காட்சி வாயிலாக இன்று (28.02.2023) தொடங்கி வைத்ததை தொடர்ந்து, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கவுள்ள பணிகளை பார்வையிட்டார்.

   இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி அமலு விஜயன், குடியாத்தம் நகர மன்ற தலைவர் திரு. சவுந்தர்ராஜன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் திரு. சச்சிதானந்தம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் திரு. வெங்கட்ராமன், இணை இயக்குனர் (சுகாதார பணிகள்) மரு. கண்ணகி, குடியாத்தம் அரசு மருத்துவமனை ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் திரு. கள்ளூர் ரவி, திரு. நத்தம் பிரதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.