கையெடுத்து கும்பிட்டு பாம்பை வழியனுப்பிய மூதாட்டி!
ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி வீட்டில் மூன்று நாட்களாக படம் எடுத்து சுற்றி திரிந்த நாகப்பாம்பு - செய்வதறியாமல் திகைத்த மூதாட்டி தீயணைப்புத் துறையினர் போராடி பிடித்த நாகப் பாம்பிற்கு கற்பூரம் ஏற்றி வழிபட்ட மூதாட்டி.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட காமராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் முனியம்மாள் (60). கணவரை இழந்து வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மூதாட்டி வீட்டிற்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள கோதுமை நாகப்பாம்பு கடந்த மூன்று நாட்களுக்கு முன் வீட்டுக்குள் புகுந்து படம் எடுத்து சுற்றித் திரிந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி செய்வதறியாமல் திகைத்து கொண்டு இருந்துள்ளார்
மேலும் யாரிடமும் சொல்லாமல் அச்சத்துடன் வீட்டில் மூன்று நாட்களாக வசித்து வந்த நிலையில் பிறகு ஒரு கட்டத்தை தாண்டி பக்கத்து வீட்டாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் ஆம்பூர் தீயணைப்பு துறை விரைந்து சென்று வீட்டுக்குள் படம் எடுத்து ஆடிய நாகப் பாம்பினை சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக போராடி பிடித்து வெளியே கொண்டு வந்தனர்.
அப்போது மூதாட்டி முனியம்மாள் படம் எடுத்து ஆடிய நாகப் பாம்பிற்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டு என்னை ஏன் பயப்பட வைக்கிறாய்? எங்கேயாவது கண் தெரியாத இடத்திற்கு போய் பிழைத்துக்கொள் என கை கூப்பி வழிபட்டார்.
இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் பிடிக்கப்பட்ட நாக பாம்பினை வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்
ஆம்பூர் அருகே மூதாட்டி வீட்டில் மூன்று நாட்களாக படம் எடுத்து சுற்றித் திரிந்த நாகப் பாம்பினால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பக்தி பரவசத்தையும் ஏற்படுத்தி உள்ளது

admin
