அதிகாரிக்கு ஆப்பு விழாவாக மாறிய கூட்டுறவு வார நிகழ்ச்சி!ஒரே மாவட்டத்தில் 10 ஆண்டுகளா! ஆளுங்கட்சி எம்எல்ஏ கேள்வி?!
ஜே.தேவபிரகாஷ்,
https://youtu.be/J10YXOagrFUMLA
கூட்டுறவு வார விழா மேடையிலேயே அதிகாரியை கடுமையாக விமர்சித்த சட்டமன்ற உறுப்பினரின் பேச்சால் கலெக்டர் உள்ளிட்ட நிகழ்ச்சியே அதிர்ந்து போனது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் 72-ஆவது கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் பேசிய அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் வழங்கிய தவறான தகவலை மேடையிலேயே சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்தது நிகழ்ச்சியின் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
அப்படி என்னதான் பேசினார் பார்ப்போம்,
மாவட்ட ஆட்சியர் அவர்கள் எனது பேச்சை குறித்துக் கொள்ளவேண்டும். நான் நிகழ்ச்சிக்கு சற்று தாமதமாக வந்தேன். அப்போது உள்ளே நுழையும் போது இணைப்பதிவாளர் அய்யப்பன் துரை மேடையில் பேசிகொண்டிருந்தார். அப்போது அவர் தவறான தகவலை தெரிவித்தார். அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட பீஞ்சமந்தை மலை கிராமத்தில் அமைக்கப்படவுள்ள கூட்டுறவு சங்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இந்த விழாவில் நடைபெறும் என்று சொன்னார்.
ஆனால் அந்த கிராமத்தில் இதற்கான இடத் தேர்வு கூட இன்னும் செய்யப்படவில்லை.
"இடமே தேர்வு செய்யாமல் எப்படித் அடிக்கல் நாட்ட முடியும்? பல வருட போராட்டத்திற்குப் பிறகுதான் அந்த பகுதியில் கூட்டுறவு கடைக்கு ஒப்புதல் கிடைத்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து இந்த கடையை வேலூருக்கு மாற்றி எடுக்கப்பட்ட நிலையில், இடம் கூட உறுதி செய்யாத நிலையில் அடிக்கல் நாட்டு விழா நடத்துவதாக அறிவிப்பது முறையல்ல," என்று அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், கடந்த 10 வருடமாக ஒரே அதிகாரி வேலூர் மாவட்டத்திலேயே பணியாற்றுகிறார். பெயரளவுக்கு ஒரு மூன்றூ மாதம் வெளியில் சென்று வருகிறார். யாருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று அவருக்கு தெரியாதா?,
பீஞ்சமந்தை மலைப்பகுதியில் 66 கிராமங்கள், 20,000 மக்கள் வசித்து வருகின்றனர். இத்தகைய பெரும் மக்களுக்கு கூட்டுறவு சங்கம் அவசியம் என்பதையும், உடனடியாக இடத்தைத் தேர்வு செய்து கட்டிடம் கட்டும் பணியைத் தொடங்கி, கூட்டுறவு சங்கத்தை விரைவாகத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.
சட்டமன்ற உறுப்பினர் அதிகாரியை நேரடியாக மேடையிலேயே குற்றம் சாட்டியதால் நிகழ்வு இடையே பதற்றம் ஏற்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரிடமும் இது பரபரப்பை ஏற்படுத்தியது.
எம்எல்ஏ நந்தகுமாரின் பேச்சை ஆமோதிக்கும் விதமாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் அவர்களும் அதிகாரி அய்யப்பன் துரையை விலாசி பேசினார்.

எது எப்படியோ பத்து ஆண்டுகள் ஒரே மாவட்டத்தில் கல்லாகட்டிவந்த அதிகாரி அய்யப்பன் துரையை அரசு கவனித்துக் கொள்ளும் என்று நம்புவோமாக.

admin
