திருமணமானதை மறைத்து இரண்டாவது கல்யாணம் செய்தவருக்கு தண்டனை! எஸ்.பி.பாராட்டு!

திருமணமானதை மறைத்து இரண்டாவது கல்யாணம் செய்தவருக்கு தண்டனை! எஸ்.பி.பாராட்டு!

த.நெல்சன்,

கடந்த 13.09.2013-ம் தேதி இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனக்கு திருமணமானதை மறைத்து சட்டவிரோதமாக இரண்டாவது திருமணம் செய்த எதிரி பார்த்திபன் (வ/48) த/பெ தர்மன் என்பவர் மீது இராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

  அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேற்படி வழக்கு மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம், ஆற்காடு இவ்வழக்கின் விசாரணை துரிதமாக நடைபெற்றது.

 இந்நிலையில் நேற்று (14.11.2025) ஆற்காடு மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நடுவர் திரு.சந்தானம், அவர்களால் இவ்வழக்கில் தொடர்புடைய எதிரி பார்த்திபன் (வ/48) த/பெ தர்மன் என்பவருக்கு 04 வருடங்கள் சிறைதண்டனை மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ .20,000/- என தீர்ப்பு வழங்கப்பட்டது.

  இவ்வழக்கில் நீதிமன்றத்தில் சிறப்பாக வழக்கு நடத்தி தண்டனை பெற்றுத் தந்த கூடுதல் அரசு வழக்கறிஞர் திருமதி.ரோகினி மற்றும் வழக்கின் புலனாய்வு அதிகாரியான திருமதி.சகுந்தலா (அப்போதைய இராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்), திருமதி. ஷாகின் (தற்போதைய இராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்) மற்றும் நீதிமன்ற காவலர் 976 திருமதி. கோட்டிஸ்வரி ஆகியோரை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.