26 வயது பாடகி எம். எல். ஏ. ஆனார்!
ம.பா.கெஜராஜ்,
பீகாரில் 243 தொகுதியில் 202 தொகுதியை கைப்பற்றி நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராகியிருக்கிறார். இந்த வெற்றியினிடையே 26 வயது இளம் எம். எல் .ஏ.வை மக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள். இசைத்துறையை சேர்ந்த அவரது பெயர் மைதிலி தாக்கூர்.
இசைத்துறையை சேர்ந்த மைதிலி தாக்கூர் என்பவர் பீகார் மாநிலம் அலிநகர் தொகுதியில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவரான வினோத் மிஸ்ராவை 12,000 வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
ஜூன் மாதம் 25 வயதை நிறைவு செய்த மைதிலி, சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
இந்த வெற்றியின் மூலம், பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் வசிக்கும் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியை முதன்முறையாக பாஜக கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்பு, 2005 ஆம் ஆண்டு சுயேச்சை வேட்பாளர் தௌசீஃப் ஆலம் 26 வயதில் பீகாரின் இளம் எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவரைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ் 26 வயதில் ராகோபூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
யார் மைதிலி தாக்கூ£?¢
மைதிலி தாக்கூர் 2000 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி மதுபனியில் பிறந்தார். அவரது குடும்பம் டெல்லியில் உள்ள நஜஃப்கரில் குடியேறியது. அங்கு அவரது தந்தை வேலை இழந்ததால், குடும்பம் நிதி நெருக்கடியை சந்தித்தது. மைதிலியின் தந்தையே ஒரு கிளாசிக்கல் பாடகர்.
குடும்பத்தை நடத்த அவர் இசையை நாடினார். அவரே மைதிலிக்கு குருவாகவும், ஆசிரியராகவும் இருந்தார். மைதிலி தனது இரண்டு சகோதரர்களுடன் சேர்ந்து, இந்தியாவின் நாட்டுப்புற மரபுகளைப் போற்றும் ஒரு இசைக்குழுவை நடத்தி வருகிறார். இவர் இந்திய கிளாசிக்கல் இசை மற்றும் மைதிலி நாட்டுப்புற இசையில் கவனம் செலுத்துகிறார்.
மைதிலி, 'ச ரி க ம ப லிட்டில் சாம்பியன்ஸ்' மற்றும் ' இந்தியன் ஐடல் ஜூனியர் ' போன்ற பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் முதலில் நிராகரிக்கப்பட்டார். ஆனாலும், அவர் மனம் தளராமல் முயற்சி செய்தார். 2017 ஆம் ஆண்டில், 'ரைசிங் ஸ்டார்' நிகழ்ச்சியில் முதல் ரன்னர்-அப் ஆக வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
ன் டிஜிட்டல் கிரியேட்டர்கள் பிரபலமடைவதற்கு முன்பே, தனது பாடல்களை பேஸ்புக் மற்றும் யூடியூபில் பகிரத் தொடங்கினார். இதன் மூலம் அவர் ஒரு சமூக வலைத்தள சென்சேஷனானார். இன்று, அவர் ஒரு பெரிய ஆன்லைன் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். உலகம் முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
2021 ஆம் ஆண்டில், இளம் கலைஞர்களுக்கான மதிப்புமிக்க விருதான 'உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவா புரஸ்கார்' விருதை சங்கீத நாடக அகாடமி அவருக்கு வழங்கியது.
அவரது சகோதரர்கள் ரிஷவ் தாக்கூர் மற்றும் அயச்சி தாக்கூர் ஆகியோர் அவருடன் சேர்ந்து நாட்டுப்புறப் பாடல்களைப் பாடினர்.
அப்படியே அரசியலை ஈர்த்த அவரை பாஜக தம் பக்கம் இழுத்துக் கொண்டது. இம்முறை சீட்டுக் கொடுக்கப்பட்டது.
அவரது தாய்மாமன்மார்களான நந்த் கிஷோர் ஜா மற்றும் சுமித் ஜா ஆகியோர் பிரச்சார ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டனர்.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிட்ட அவர் அலிநகர் தொகுதியில் வெற்றி பெற்றால், மிதிலா ஓவியத்தை பள்ளிகளில் ஒரு பாடமாக அறிமுகப்படுத்துவேன் என்றும், அலிநகர் தொகுதியின் பெயரை 'சீதாநகர்' என்று மாற்றுவேன் என்றும், குறிப்பாக பெண் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை மேம்படுத்துவேன் என்றும் அவர் உறுதியளித்து வென்றுள்ளார்.
வாழ்க அவரது அரசியல் பணி.

admin
