திருப்பத்தூரில் வேலூர் நறுவீ மருத்துவமனை சிறப்பு மருத்துவ முகாம்!
Ma.ba.Gajaraj,
திருப்பத்தூரில் வேலூர் நறுவீ மருத்துவமனை இதயம் மற்றும் நுரையீரல் நிபுணர்களின் சிறப்பு மருத்துவ முகாம்
திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இதய நோயாளிகள் மற்றும் நுரையீரல் சம்மந்தப்பட்ட நோயாளிகளுக்கு நறுவீ மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் நேரிடையாக சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவ முகாம் திருப்பத்தூர் ரித்வி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் பகுதியில் உள்ள இதய நோயாளிகள் மற்றும் நுரையீரல் சம்மந்தப்பட்ட நோயாளிகள் வேலூர் நறுவீ மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுவதற்கு ஏற்படும் கால அளவு மற்றும் செலவினத்தை குறைக்கும் வகையில் நறுவீ மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் திருப்பத்தூரிலேயே நேரிடையாக சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் ரித்வி மருத்துவமனையுடன் இணைந்து வேலூர் நறுவீ மருத்துவமனை நடத்தும் இந்த மருத்துவ முகாம் திருப்பத்தூர் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. பிரதி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் இந்த சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
குடும்பத்தில் யாருக்கேனும் இதயம் சம்மந்தமான நோய் அறிகுறி, அதிக இரத்த அழுத்தம், முறையற்ற இதய துடிப்பு, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு திருப்பத்தூர் ரித்வி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் யோகானந்த் தங்கராஜுடன் இணைந்து வேலூர் நறுவீ மருத்துவமனை இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் விநாயக் சுக்லா, டாக்டர் ரே ஜார்ஜும், மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இருமல் உள்ளவர்கள், சுவாசிக்க சிரமப்படுபவர்கள், நீடித்த சளி அல்லது கபம் வெளியேறுதல், இருமலுடன் இரத்தம் வருதல், உரக்கத்தில் சுவாசம் தடைபடும் நிலை உள்ளவர்களுக்கு நறுவீ மருத்துவமனை நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரின்ஸ் ஜேம்ஸ் சிகிச்சை அளிக்க உள்ளனர்.
இதனை தொடர்ந்து தண்டுவடம் மற்றும் சிறுநீரகம் பாதிப்பு உள்ளவர்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோயாளிகளுக்கு வேலூர் நறுவீ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம் மருத்துவ முகாம் தொடக்க விழா நேற்று திருப்பத்தூர் ரித்வி மருத்துவமனையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரித்வி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் யோகானந்த் தங்கராஜ், நறுவீ மருத்துவமனையின் டாக்டர் பிரின்ஸ் ஜேம்ஸ், டாக்டர் ரே ஜார்ஜ், தலைமை இயக்குதல் அலுவலர் சரவணன் இராமன் இரு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

admin
