பல்லை இளிக்கும் பள்ளிக்கூட பரிதாபங்கள்! மாதம் பிறந்தால் அரசு சம்பளம் அள்ளும் அதிகாரிகள்!

பல்லை இளிக்கும் பள்ளிக்கூட பரிதாபங்கள்! மாதம் பிறந்தால் அரசு சம்பளம் அள்ளும் அதிகாரிகள்!

கு.அசோக்,

சோளிங்கர் கரடிகுப்பத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள  அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தை அகற்ற கோரிக்கை

  இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஒன்றியம் கரடி குப்பம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. 30-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இங்கு பயில்கின்றனர்.

  கூடவே இதே வளாகத்தில் 25க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை கொண்டு  அங்கன்வாடி  இயங்கி வருகிறது.

  இங்கு 2003 கட்டப்பட்ட  கட்டிம் முழுதும் சேதமடைந்து எப்போழுது விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலையில் உள்ளது. செடிகள் ஆள் உயரத்திறக்கு முளைத்து புதர் மண்டிக்காடக்கிறது.பாம்பு, பூரண் , தேள் உள்ளிட்ட விஷ சந்துக்கள் திடீரென வகுப்பறைக்குள் புகுந்து விடுகிறது.

 பள்ளி வளாகத்தில் கூட மாணவ மாணவிகள் விளையாடுவதற்க்கு கூட அச்சப்படுகின்றனர். சேதமடைந்த கட்டிடத்தை முழமையாக இடித்து அகற்றவும் , புதர்களை அகற்றவும் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை வைக்கின்றனர்.

வேலூர் மாவட்டம்,

 அதே போல்  குடியாத்தம் அருகே  அரசு பள்ளி வளாகத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக குளம் போல் தேங்கியுள்ள மழை நீர்உடனடியாக தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

  வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ஆந்திர தமிழக எல்லையோரம் அமைந்துள்ள பரதராமி ஊராட்சியில் அரசு தொடக்கபபள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

  இதனிடையே கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக  கனமழையால் மழைநீர் பள்ளி வளாகத்தில் புகுந்து குளம் போல் தேங்கி பாசி பிடித்து  பச்சைக் கலரில் என காட்சியளிக்கிறது.

   மேலும் அங்கு மாணவர்கள் பயில முடியாத சூழ்நிலையில் அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாணவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டள்ளனர்.

  இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பார்வையிட்டும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், எனவே உடனடியாக கால்வாய்களை சீரமைத்து பள்ளியில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.