அனைத்து விதமான போதை வஸ்த்துக்களும் காட்பாடியில் புழக்கம்?

அனைத்து விதமான போதை வஸ்த்துக்களும் காட்பாடியில் புழக்கம்?

ஜி.கே.சேகரன்,

 காட்பாடி ரயில் நிலையம் அருகே போதை மாத்திரை வைத்திருந்த காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்த வாலிபர் கைது. அவரிடமிருந்து 500 போதை மாத்திரை ஐ-போன் உள்ளிட்டவை பறிமுதல் காட்பாடி போலீசார் நடவடிக்கை.

 வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காட்பாடி ரயில் நிலையம் அருகே பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரிடம் சோதனை மேற்கொண்டனர் அப்பொழுது அவரிடம் போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.

   இதனை அடுத்து அந்த வாலிபரை காவல் நிலையம் அழைத்து வந்து மேற்கொண்ட தொடர்வி விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்பதும் அவரிடம் இருந்து 500 போதை மாத்திரைகள் மற்றும் விலை உயர்ந்த ஆப்பிள் ஐபோன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

   பின்னர் சூரிய பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆசிரியர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

   உலகத்தில் உள்ள அனைத்து விதமான போதை வஸ்த்துக்களும் காடிபாடி பகுதிஇல் சர்வசாதாரணமாக கிடைப்பது தான் வேதனை.

  ஒரு சில பகுதிகளில் உள்ள பங்க் கடைகளில் சிகெரெட் விற்கக்கூடாது என்றெல்லாம் ஸ்டிரிக்ட் காட்டியவர்கள் இதெற்கெல்லாம் என்ன செய்வார்களோ?