இந்த ஆண்டும் வேலூரில் புத்தக விழா!

இந்த ஆண்டும் வேலூரில் புத்தக விழா!

கு.அசோக்,

வேலூரில் புத்தக கண்காட்சி 60 அரங்குகளில் 50 லட்சம் புத்தகங்கள்  கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது இக்கண்காட்சி துவங்கியது

 வேலூர்மாவட்டம், வேலூர் கோட்டை மைதானத்தில்  புத்தகத்திருவிழா நேற்று துவங்கியது இன்று முதல் 10 நாட்கள் வரும் 7 ஆம்தேதி வரையில் புத்தக கண்காட்சி நடக்கிறது.

  இதில்   புத்தக் கண்காட்சியில் 60 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன 200 பதிப்பகங்கள் தங்களின் புத்தகங்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

  சுமார் 50 லட்சம் புத்தகங்கள் இக்கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

 இத்திருவிழாவில் சிறுவர்கள் படிக்கும் புத்தகங்கள் மருத்துவம்,சமையல்,கதைகள் கவிதைகள் புதினங்கள் என பல தரப்பட்ட புத்தகங்கள் இதில் இடம் பெற்றுள்ளது.

  இதில் மாணவர்கள் பெற்றோர்களும் குழந்தைகளுடன் வந்து ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்   மேலும் தினசரி பள்ளி கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் தினசரி இடம் பெறவுள்ளது.