காட்பாடியை குறிவைத்து கடத்தப்படும் கஞ்சா! ஐந்து பேருக்கு வலை வீச்சு!

காட்பாடியை குறிவைத்து கடத்தப்படும் கஞ்சா! ஐந்து பேருக்கு வலை வீச்சு!

ஜி.குலசேகரன்,

  ஒரிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நபர் கைது. 14 கிலோ கஞ்சா பறிமுதல்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் ஒரிசா மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வருவதாக திட்டமிட்ட குற்றங்கள்  நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  அதன் அடிப்படையில் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

   அதன் அடிப்படையில் அவர் கொண்டு வந்த இரண்டு டிராவல் பேக்கை சோதனை செய்தபோது அதில் 14 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

 அதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

  அதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கேரளா மாநிலம் தளக்காடு மல்லாபூரம் தெக்கான் குட்டூர், அருகே சையத் அலிகுட்டி  மகன் அஸ்பாக் (வயது 28) என்பது தெரிய வந்தது.

  அதனைத் தொடர்ந்து அவர் ஒரிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து காட்பாடில் விற்பனை செய்வதற்காக எடுத்து வந்தது தெரிய வந்தது.

  அவரிடம் இருந்த 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய ஐந்து பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.