மக்கள் கட்டிய நிழற்குடையை தகர்தெறிந்த அதிகாரிகள்!
கு.அசோக்,
பா.ம.க. நிதி திரட்டி கட்டிய பேருந்து நிழற்கூடத்தை முன் அறிவிப்பு இன்றி இடித்து அகற்றிய அதிகாரிகளின் செயலைக்கண்டித்து பாமகவினர் சாலை மறியல் கைது
இராணிப்பேட்டைமாவட்டம்,லாலாப்பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் பல ஆண்டுகளுக்கு முன்னர் சொந்தமாக நிதி திரட்டி பேருந்து நிழற் கூடத்தை லாலாப்பேட்டை சாலையோரம் அமைத்திருந்தனர்.
அதில் திடீரென நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நன்றாக இருந்த இந்த நிழற் கூடத்தை முன் அறிவிப்பின்றி இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர்.
இதனை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் நிர்வாகிகள் மணி,ஜோதி,மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் நிழற்குடை இடித்தது தவறு என கூறி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் இவர்களை கைது செய்தனர் இதனால் லாலாப்பேட்டையில் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

admin
