பெண் போலீஸ் ஆபாச படம்! சூப்பிரெண்டு மீது விசாரணை! ஏட்டாம்மா மீது ஆத்திரம்! காவலர் குடியிருப்பை இப்படித்தான் அசிங்கம் செய்வதா!

பெண் போலீஸ் ஆபாச படம்! சூப்பிரெண்டு மீது விசாரணை! ஏட்டாம்மா மீது ஆத்திரம்! காவலர் குடியிருப்பை இப்படித்தான் அசிங்கம் செய்வதா!

ம.பா.கெஜராஜ்,

வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிந்த சந்தன புகழ் பெற்ற மாவட்டத்தில், நெடுஞ்சாலையோரம் ஒரு காவல் நிலையம் உள்ளது.

  அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டாம்மா கணவரை விரட்டிவிட்டு, பக்கத்தில் இருந்த ஒரு இளம் ஏட்டாய்யாவுடன் இல்லீகல் காண்டாக்ட் வைத்திருக்கிறாராம்.

   இந்த இரு ஏட்டுகளும் காவலர் குடியிருப்பில் அடிக்கடி மீட் பண்ணிக் கொள்கிறார்களாம்.

  இதை பார்த்து வரும் அந்த காவலர் குடியிருப்பு வாசிகள் அவர்களை எவ்வளவு எச்சரித்தும் அவர்களுடைய சந்திப்பு நின்றபாடில்லையாம். 

  போதாக்குறைக்கு அந்த ஏட்டாம்மா இது என்னுடைய பர்சனல், நீங்க ஏன் இதில் தலையிடுகிறீர்கள் என்று ஏகத்துக்கும் ஆராத்தி எடுக்கிறாராம்.

  இதே ஏட்டாம்மா தான் சமீபத்தில் லாட்டரி சீட்டு மோசடியில் ஈடுபட்டு விசாரணையில் சிக்கினார் என்கிற நிலையில், இப்படி மீண்டும் ஆட்டம் போட்டு வருகிறாராம். இத்தனைக்கும் அவர் வேறு காவல் நிலையத்திலிருந்து தற்போது இருக்கும் ஸ்டேஷனுக்கு சிபாரிசின் பேரில் வந்தவராம்.

  எதற்காக இந்த சிபாரிசு இருந்திருக்கும்?.

 இது போன்ற இல்லீகல் காண்டாக்ட்டால் புதுச்சேரியில் ஒரு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.

   காரைக்கால் மகளிர் போலீஸ் நிலையத்தில் 35 வயது பெண் போலீஸ் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவரது கணவரும் போலீஸ்காரராக உள்ளார்.இந்த நிலையில் அந்த பெண் போலீசுக்கும் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது.

  அவர்கள் அடிக்கடி நேரில் சந்தித்து நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. திருமணமான அந்த போலீஸ் சூப்பிரண்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.

  புதுச்சேரிக்கு சென்று விட்டதால் நேரடியாக இருவரும் பழையபடி தொடர்பில் இருக்க முடியாமல் வருத்தமடைந்தனர்.

  இருந்தாலும் 2 பேரின் தொடர்பும் நீடித்து வந்தது. அவர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் பேசி வந்தனர்.

   இருவரும் செல்போனில் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் பேசி வந்தனர். இருவரும் செல்போனில் 'வீடியோ சாட்டிங்' செய்து வந்துள்ளனர்.

  ஒரு கட்டத்தில் பெண் போலீஸ் தனது நிர்வாண வீடியோக்களை போலீஸ் அதிகாரியின் செல்போனுக்கு பரிமாறிக் கொண்டிருப்பது தெரியவந்தது. வீட்டில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தி வந்ததை அறிந்த பெண் போலீசின் கணவர் சந்தேகமடைந்தார்.

   அவர் மனைவியின் செல்போனை ஆய்வுசெய்த போது அவர் குறிப்பிட்ட போலீஸ் அதிகாரியுடன் நீண்ட நேரம் பேசி இருப்பது தெரியவந்தது.

   மேலும் அவருடன் வீடியோ சாட்டிங் செய்து நிர்வாண வீடியோக்கள் பகிர்ந்து இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து  போலீஸ்காரர் ஆபாச வீடியோ ஆதாரங்களுடன் காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி சவுஜன்யாவிடம் புகார் அளித்தார்.

   கள்ளத்தொடர்பு விவகாரம் கணவருக்கு தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் போலீஸ் வீட்டில் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

 புகாரின் அடிப்படையில் சூப்பிரண்டு லட்சுமி சவுஜன்யா புதுச்சேரி போலீஸ் தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட போலீஸ் சூப்பிரண்டை விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

  இது தொடர்பாக அவர் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

 இது போன்றதொறு பிரச்சனை திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்படும் முன் அந்த கள்ள தொடர்பு ஏட்டாம்மாவையும் ஏட்டுவையும் அதிகாரிகள் கண்டித்தால் சிறப்பு என்று கௌரவமாக வாழும் காவலர் குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.

எல்லாம் குமரேசன் துணை!.