கலெக்டர் கார் எதிரில் பெண் தர்ணா!

கலெக்டர் கார் எதிரில் பெண் தர்ணா!

ஜி.குலசேகரன்,

 வேலூர் மாவட்ட ஆட்சியரின் கார் முன் கர்ப்பிணிப்பெண் தர்ணா கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்ணாவால் பரபரப்பு.

 வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் ஷர்மிளா நிறைமாத கர்பினி இவரது கணவர் வேலூர் மாநகராட்சியில் இரண்டாவது மண்டலத்தில் துப்புரவு பணியாளராக உள்ளார், அவரது பெயர் கிருபானந்தன்.

 இவர் மனைவி ஷர்மிளாவை கர்பமாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளார்,  இதனால் அப்பெண் கையில் புகார் மனுவுடன்  தர்ணாவில் ஈடுபட்டார்.

  அதில் கூறியிருப்பதாவது, கிருபானந்தத்தினால் நான் கர்பமானேன். இதை அறிந்த கணவர் என்னைவிட்டு விட்டு ஓடிவிட்டார். பிறகு அவரை தொடர்பு கொண்டேன். போன் எடுக்கவில்லை.

  ஆபீஸ் சென்று பார்த்தல் அங்கும் அவர் தலைமறைவாகி விடுகிறார்.

  இப்படியே பலமுறை போன் செய்தும் நேரிலும் பார்க்க சென்றேன் அவர் என் கண்ணுக்கு தென்படாமல் ஒளிந்து கொள்கிறார். என்னை கவனிக்காமல் விட்டுவிட்டார், யாரும் ஆதரவு இல்லாத நான் என் தாயை இழந்தும், கணவரால் ஏமாற்றப்பட்டும், கர்பினியாக வாழ்ந்து வருகிறேன்.

  என்னிடம் இருக்கும் நகைகள் அனைத்தையும் விற்று, வீட்டு வாடகையையும், மருத்துவமும் பார்த்துக் கொண்டேன்.

  எனக்கு கர்ப்பபை ஹார்மோன் குறைபாடு வியாதி இருக்கிறது, இதனால் இந்த தருனத்தில் நான் கருவுற்று என் குழந்தை வயிற்றில் சுமந்து கொண்டு இதுநாள் வரை வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தேன்.

   இப்போது 10 மாத நிறைமாத கர்பிணியாக இருக்கிறேன். என்னால் எதுவும் செய்யமுடியவில்லை.

   எனக்கு யாரும் ஆதரவு இல்லை, என் கணவர் எனக்கு குழந்தை கொடுத்துவிட்டு என்னை கவனிக்காமலும் மருத்துவ செலவுக்கு சாப்பாட்டிற்கு பணம் தராமலும் ஓடி ஒளித்து கொண்டு இருக்கிறார்.ரெ

 எனக்கு பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுக்குவேண்டும்  ஆகவே  மருத்துவமனையில் சேரவேண்டும் என கூறிவிட்டார்கள்.

   பிரசவம் பார்க்க என்னிடம் பணம் இல்லை, எனக்கு யாரும் துணையும் இல்லை 

 என கூறி ஆட்சியரின் கார் முன்னர் தர்ணாவிலீடுபட்டார்.

 பாதிக்கப்பட்ட பெண் நீதி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கார் முன்  தர்ணா போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர் அவர் சென்றுவிட்டார்.