அதிகாரிகளிடம் தமிழக வெற்றி கழக அரசு உஷாராக இருக்க வேண்டும்!
Ma.ba.Gajaraj,
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் தந்தைஎஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி: “ விஜய், தான் முதல்வர் ஆக வேண்டும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கூறினார். அதற்கான களப்பணிகளையும் ஆற்றினார். என்னை விட என் மனைவி மகிழ்ச்சியாக இருக்கிறார்.
விஜய் அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்தார். வெற்றி நமதே என்ற மந்திரமே விஜய்யின் தாரக மந்திரமாக இருந்தது. விஜய்யை தங்களது குடும்பத்தில் ஒருவராக தமிழக மக்கள் பார்க்கின்றனர். ஒரு அப்பாவாக ரொம்ப சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது.
இதைவிட என்ன வேண்டும்? எவ்வளவோ எதிர்ப்புகளை, சோதனைகளை தாண்டி விஜய் வெற்றி பெற்றுள்ளார். இது சாதாரண வெற்றி இல்லை. யாருடனும் கூட்டணி வைக்காமல் தனியாக நின்று வெற்றி பெற்றதே பெரிய விசியம்” என்று தவெக வெற்றி குறித்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டியளித்துள்ளார்.
தமிழக முழுவதும் இருந்து வெற்றி என்கின்ற செய்தி வந்ததை தொடர்ந்து விஜய் அவரது தந்தையை அடையாறு வீட்டுக்குச் சென்று ஆரத்தழுவி மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்.
பின்னர் அவர் வெற்றிச் சான்றிதழ் பெறுவதற்காக பெரம்பூர் சென்றார்.
கடந்த 1963 க்கு பிறகு அதிமுக திமுக இல்லாத ஒரு கட்சி இதுதான் முதல் முறையாக வென்று இருக்கிறது.
இதிலே தமிழக வெற்றி கழக சார்பாக வெற்றி பெற்றுள்ள அனைவருமே பெரும் செல்வந்தர்கள் என்று சொல்லிவிட முடியாது ஆட்டோ ஓட்டுநர்கள் செய்தியாளர்கள் என்று பல துறையில் இருந்தவர்கள் எல்லாம் சீட்டு கிடைக்க பெற்று வென்றுள்ளார்கள்.
குறிப்பாக ராஜபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகி இருக்கும் திருமதி கே.எ.ஜெகதீஸ்வரி அவர்கள் நமது லைவ் லுக்.இன் தூத்துக்குடி மண்டல சீனியர் செய்தியாளர் ஆவார்.
தற்போது தனிப்பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காத நிலையில் தமிழக வெற்றி கழகம் பெருவாரியான தொகுதிகளை பெற்றிருக்கிறது இந்நிலையில் தற்போது அக்கட்சிக்கு தேவைப்படும் சில பல சீட்டுகள் காங்கிரஸ் பகுதியில் இருந்து கிடைக்குமா விசிக ஒத்து வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஒரு வாக்குக்கு ரூபாய், 2000 3000 என்று வாரி கொடுத்து வாக்கு திருட பார்த்த பெரும் முதலைகளுக்கு மக்கள் செருப்படி கொடுத்திருக்கிறார்கள்.
புதிய ஆட்சி அமைக்க உள்ள தமிழக வெற்றி கழகம்யாரிடம் உஷாராக இருக்கிறார்களோ இல்லையோ அதிகாரிகளிடம் மிகுந்த உஷார் உடன் இருக்க வேண்டும்.
அரசியல்வாதியைக் கொடுப்பவர்களே அவர்கள் தான்.
தற்போது ஆட்சியை விட்டுச் சென்றிருப்பவர்கள் அதிகாரிகளின் கை பாவைகளாக இருந்து சாதாரண மக்களை பல்வேறு விதமான கொடுமைகளுக்கு ஆளாக்கி விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
எந்த அலுவலகத்தில் எந்த நியாயமான வேலைகளுக்கும் பணம் கொடுத்தால் மட்டுமே நடக்கும் என்கிற நிலையை விட்டுச் சென்றிருக்கிறார்கள் அதை தமிழக வெற்றிக்கழக அரசு மிகுந்த கவனத்துடன் கையாண்டு மக்களை வஞ்சித்து பழகிய அதிகாரிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்,இதுவே விஜய் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்கான முக்கிய வழி என்பது நம் கருத்து.
அதேபோல் அரசியல் பேச்சில் புடுங்கி என்று சொல்லிக் கொள்ளும் பூண்டே இத்துடன் அனைத்தையும் பொத்திகொண்டுகொண்டு பீகார் பக்கமாக ஓடி வடுவது நல்லது.
வெற்றிப்பட்டியல்
ஆயிரம் விளக்கு தொகுதி தவெக வேட்பாளர் ஜே.சி.டி பிரபாகர் வெற்றிl
மன்னார்குடி தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் வெற்றி,
தமிழகத்தோடு மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது, அசாமிலும் என்டிஏ கூட்டணி ஆட்சி தொடர்கிறது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸின் ஹாட்ரிக் ஆட்சிக்கு பாஜக முடிவுரை எழுதியுள்ளது. கேரளத்தில் ஆளும் எல்டிஎஃப் கூட்டணியை தோற்கடித்துள்ளது காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி.
பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றார்.
திருச்சி கிழக்கு தொகுதியிலும் தவெக தலைவர் விஜய் 26,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார2026 சட்டப்பேரவைத் தேர்தல் விசித்திரமான பல மக்கள் தீர்ப்புகளை எழுதியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
அந்த வகையில் ஆளும் திமுகவில் முதல்வர் ஸ்டாலின் தோல்வி கண்டது அக்கட்சிக்கும், ஸ்டாலினுக்கு தனிப்பட்டை வகையிலும் பெரிய பின்னடைவு
>>திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு வெற்றி
>> கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி
>> சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
>> திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் ரகுபதி வெற்றி
>> ராமநாதபுரம் தொகுதி திமுக வேட்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் வெற்றி
>> துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளர் சேகர் பாபு வெற்றி.
தோல்வி பட்டியலில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ரகுபதி உள்ளிட்ட சுமார் 30 அமைச்சர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள்.
குறிப்பு. வி.எஸ்.பாபு என்கின்ற தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஸ்டாலினை தோல்வியடைய வைத்திருக்கிறார். இதேபோல் கடந்த 2006 ஆம் ஆண்டு பர்கூரில் போட்டியிட்ட அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களை சுகவனம் என்பவர் தோற்கடித்தார் அது சமயம் கருணாநிதி அவர்கள் முரசொலியில் கூறியது தற்போது நினைவுக்கு வருகிறது.
"ஊசியின் காதில் ஒட்டகம் நுழைந்தது" என்று கருணாநிதி சொன்னார்.

admin
