சுமார் 17 கோடி மதிப்பீட்டீல் நல திட்டங்கள்! மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி தகவல்!
ஆர்.ரமேஷ்,
திருப்பத்தூர் மாவட்டத்துக்கு சுமார் ரூ.17 கோடி மதிப்பீட்டீல் நல திட்டங்களை முதல்வர் அளித்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி தகவல் வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், காணொளி காட்சி வாயிலாக, பல்வேறு மாவட்டங்களில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள பள்ளி வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தும், புதிய பள்ளி வகுப்பறை கட்டடங்களை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்கள்.
அதனடிப்படையில், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில், நபார்டு திட்டத்தின்கீழ், ரூ.2.37 கோடி மதிப்பீட்டில் புதியதாக 6 வகுப்பறைகள், ஆய்வகம், 1 ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிக்கான கட்டுமானப்பணிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி.க.சிவசௌந்திரவல்லி,இ.ஆ.ப., அவர்களும், சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.செ.வில்நாதன் அவர்களும் பூமி பூஜை மூலம் தொடங்கி வைத்தார்கள்.
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20.09.2025) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், காணொளி காட்சி வாயிலாக, பல்வேறு மாவட்டங்களில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள பள்ளிக்கட்டடங்களை திறந்து வைத்தும், புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.க.சிவசௌந்திரவல்லி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவிக்கையில்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுத்துறைகளும் முதன்மைத்துறைகளாக விளங்கிட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், ஒவ்வொரு துறைக்கும் சிறப்பான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக, பள்ளிகல்வித்துறையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி பள்ளிக்கல்வித்துறையினை மேம்படுத்தியதோடு, மாணவர்களின் கல்வித்தரத்தினை மேம்படுத்தி வருவதோடு, மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளான கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகங்கள், கழிப்பறை வசதிகள், சுற்றுச்சுவர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தும் வருகிறார்கள்.
அதனடிப்படையில், இன்றைய தினம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20.09.2025) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், காணொளி காட்சி வாயிலாக, பல்வேறு மாவட்டங்களில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள பள்ளி வகுப்பறைக் கட்டடங்களை திறந்து வைத்தும், புதிய பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் ஆய்வகங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்கள்.
அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில், ரூ.195.30 இலட்சம் மதிப்பீட்டில், கஜல்நாயக்கன்பட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8 வகுப்பறைகள், 2 அலகு கழிப்பறை கட்;டடத்தினையும், ரூ.435.10 இலட்சம் மதிப்பீட்டில் ஜோலார்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 14 வகுப்பறைகள், 2 அலகுகள் ஆய்வகம், 2 அலகுகள் கழிப்பறை கட்டடத்தினை திறந்து வைத்துள்ளார்கள்.
மேலும், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில், ரூ.49.48 இலட்சம் மதிப்பீட்டில் குனிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டடத்தினையும், ரூ.88.73 இலட்சம் மதிப்பீட்டில் பெரியகண்ணாலப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 வகுப்பறைகள், 1 பெண்கள் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டது.
மேலும் ரூ.73.82 இலட்சம் மதிப்பீட்டில் மட்றப்பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகள், 1 ஆண்கள் கழிப்பறை, 1 பெண்கள் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதியும், ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில், ரூ.237.25 இலட்சம் மதிப்பீட்டில் பெரியாங்குப்பத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 வகுப்பறைகள், ஆய்வகம், 1 ஆண்கள் கழிப்பறை, பெண்கள் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதியும், ரூ.49.48 இலட்சம் மதிப்பீட்டில் கிரிசமுத்திரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டது.
அரங்கல் துருகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகள், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில், ரூ.88.73 இலட்சம் மதிப்பீட்டில் சிக்கனங்குப்பத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 வகுப்பறைகள், 1 பெண்கள் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதியும், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில், ரூ.63.51 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.
புதுப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகள், 1 ஆண்கள் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி, ரூ.67.51 இலட்சம் மதிப்பீட்டில் வெலக்கல்நத்தத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகள், 1 ஆண்கள் கழிப்பறை, சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் வசதியும், ரூ.98.96 இலட்சம் மதிப்பீட்டில் புதுப்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 4 வகுப்பறைகள், ரூ.98.96 இலட்சம் மதிப்பீட்டில் நாட்றம்பள்ளியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 4 வகுப்பறைகள் போன்ற கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி வைத்த நிகழ்ச்சியில் சம்மந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில், நபார்டு திட்டத்தின்கீழ், ரூ.2.37 கோடி மதிப்பீட்டில் புதியதாக 6 வகுப்பறைகள், ஆய்வகம், 1 ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி கட்டுமானப்பணிகள் அமைப்பதற்கான பணிகள் பூமி பூஜை மூலம் தொடங்கி வைக்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், மாதனூர் ஒன்றிய குழு தலைவர் திரு.சுரேஷ்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திரு.ரவி, பெரியாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.பொன்னி கப்பல்துறை, வார்டு உறுப்பினர்கள் திரு.ஜோதிவேலு, திரு.கவிக்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திருப்பத்தூர் மாவட்டம்.

admin
