அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அடாவடி!

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அடாவடி!

கு.அசோக்,

 அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்த 85 வயது மூதாட்டியை கழிவறைக்கு அழைத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் சக்கர நாற்காலியை கேட்டுள்ளார் மகன்.  ஆனால் அவருக்கு சக்கர நாற்காலி வழங்கப்படாததால் அவரது 65 வயது மகன் மூதாட்டியை தமது கைகளால் தூக்கிச்சென்றார்.

  அரக்கோணம் அரசு மருத்துவமனையில் இத்தகையான அலட்சிய செயலானது பொது மக்களை மிகவும் வேதனை அடைய செய்தது, 

  இதனிடையே அரக்கோணம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.