தனி கட்சி துவக்குவதாக மாற்றுத்திறனாளர்கள் அறிவிப்பு!
ஜி.கே.சேகரன்,
தேர்தல் சீசன் நெருங்கிவிட்டாலே புது புது கட்சிகள் முளைக்கும். அந்த வகையில் தற்போது, மாற்றுத்திறனாளர்கள் தனி கட்சி துவக்கம் அறிவிப்புஅதற்கான கருத்து கேட்பு கூட்டங்கள் நடந்தது
தமிழகத்தில் மாற்றுத்திறனாளர்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் தங்களின் கோரிக்கைகளை பல முறை அரசுக்கு சொல்லியும் நிறைவேற்றப்படாததால் தற்போது அவர்களே மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை துவங்குவதற்கு தங்களுக்கு என கருத்துகேட்பு கூட்டங்களை தற்போது நடத்தி வருகின்றனர்.
இதில் வேலூரிலும் இந்த கருத்து கேட்பு கூட்டம் பாண்டியன் என்பவர் தலைமையில் நடைபெற்றது.
4 அமைப்புகளோடு இணைந்து இந்த மாற்றுத்திறனாளர்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை உருவாக்க நாங்களும் முடிவு எடுத்து தஞ்சாவூர் திருச்சி கடலூர் சென்னை வேலூர் ஆகிய இடங்களிலும் உள்ளிட்ட 30 மாவட்டங்களிலும் இந்த கருத்து கேட்பு கூட்டங்களை நாங்கள் நடத்துகிறோம் என்றனர்.
மேலும், இந்த மாற்றுத்திறனாளர்களுக்கு என மத்திய மாநில அரசுகளிடம் குறைகளை தெரிவிக்க இந்த அரசியல் அமைப்பு பயன்படும், இது மாற்றுத் திறனாளர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் துவங்கபடவுள்ளது என்கிறார்கள்.

admin
