திநங்கையை திருமணம் செய்து ஏமாற்றிய சப் இன்ஸ்பெக்டரின் மகன்!

திநங்கையை திருமணம் செய்து ஏமாற்றிய சப் இன்ஸ்பெக்டரின் மகன்!

கு.அசோக்,

  சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த யூடியூப்பர் திருநங்கை சஞ்சனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக வாலிபர் மீது புகார். காவல் நிலையத்தில் நீதி கிடைக்கவில்லை என தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சி செய்ததால் அரக்கோணத்தில் பரபரப்பு.

  இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த ஜோதி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன். இவர் திருத்தணி காவல் நிலையத்தில் துணை காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருவதாக தெரிகிறது. இவருடைய மகன் ரஞ்சித் என்ற வாலிபர் சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த யூடியூப்பர்   சஞ்சனா என்கின்ற திருநங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

   கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட சஞ்சனா மற்றும் ரஞ்சித் ஆகியோரது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக சென்றதாகவும், திருமணம் ஆகி நான்கு வருடங்கள் கழித்து அடிக்கடி ரஞ்சித் சஞ்சனாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

  இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அடிக்கடி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ரஞ்சித் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக சஞ்சனா விற்கு தகவல் கிடைத்தது.

 இந்நிலையில் தன்னை ஏமாற்றி விட்டதாக சஞ்சனா ரஞ்சித்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சஞ்சனா எழுப்பிய கேள்விக்கு ரஞ்சித் உரிய பதிலளிக்காமல் சஞ்சனாவியை விட்டு பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்தால் சஞ்சனா ரஞ்சித்தை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு நேற்று ரஞ்சித் வீட்டிற்கு சென்றதாகவும் அங்கு அவரை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சஞ்சனா அரக்கோணம்  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.