டெல்லி மாநகராட்சியை பாஜகவிடமிருந்து பறிக்கும் ஆம் ஆத்மி!

டெல்லி மாநகராட்சியை பாஜகவிடமிருந்து பறிக்கும் ஆம் ஆத்மி!

 ஜார்ஜ்.ரவி,

 கடந்த முறை டெல்லி மாநகராட்சியை பா.ஜ.க.கைப்பற்றியிருந்தது, அப்படியிருக்க டெல்லி மாநகராட்சியை பாஜகவிடமிருந்து ஆம் ஆத்மி பறிக்கிறது.

 டெல்லி மாநகராட்சியில் உள்ள மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது.

 அதன்படி ஆஜ் தக் செய்தி நிறுவனம்:- ஆம் ஆத்மி 149 முதல் 171 இடங்களில் வெற்றி பாஜக - 69 முதல் 91 இடங்களில் வெற்றி காங்கிரஸ் - 3 முதல் 7 இடங்களில் வெற்றி.

 நியூஸ் எக்ஸ் செய்தி நிறுவனம்:- ஆம் ஆத்மி - 159 முதல் 175 இடங்களில் வெற்றி பாஜக - 70 முதல் 92 இடங்களில் வெற்றி காங்கிரஸ் - 4 முதல் 7 இடங்களில் வெற்றி.

 டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம்:- ஆம் ஆத்மி - 146 முதல் 156 இடங்களில் வெற்றி பாஜக - 84 முதல் 94 இடங்களில் வெற்றி காங்கிரஸ் - 6 முதல் 10 இடங்களில் வெற்றி.

 இப்படித்தான் பெரும்பாலான செய்தி நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு கூறுகின்றனர்.

 அதன் அடிப்படையில் பார்த்தால், டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறும்.