டெல்லி புறப்பட்டார் தமிழக முதல்வர்!

டெல்லி புறப்பட்டார் தமிழக முதல்வர்!

ம.பா.கெஜராஜ், 

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லிக்கு புறப்பட்டார்.

ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது.

   இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு, இதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

 மத்திய அரசு 32 பிரிவுகளில் நாடு முழுவதும் சுமார் 200 கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.

 எல்லா மாநிலங்களிலும் இந்த கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. தமிழகத்தில் சென்னையில் ஜி-20 கூட்டம் நடைபெறும்

 இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ஜி-20 ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டார். உடன் துரைமுருகன் சென்றிருக்கிறார்.